பக்கம்:அவள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 லா, ச. ராமாமிருதம் "ஜனனி விளையாட்டு போதுமா? திரும்பி வரு கிறாயா?" 'இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லையே, அதற்குள் எாகவா?” "ஜனனி, இந்த விளையாட்டுப் போகப் போகப் புரியாது.” - "புரிந்துகொள்ள வேண்டுமென்றுதானே வந்திருக் கிறேன்?” "சரி, உன் இஷ்டம்! ஆனால் ஆரம்பிக்கையி லேயே உன் விளையாட்டு உன் இஷ்டம்போல் ஆரம்பித்ததோ' ஏன்?’’ ‘'நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத் ததோ! உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ, எப்படியும் உன் சக்தியினால் அல்ல!’ "என்னைப் பார்; கண்ணாட்டி பாருடீ விளக்கையே பார்த்துண்டிருக்கையே- ஜனனி பார்க்கிறாள், "ஜனனி ஜனனீ! விளையாட்டில் இன்னும் சிக்கிக்கொள்கிறாய். அந்தப் பார்வையை அவளிடம் ஏன் காட்டினாய்? பார்க்கச் சொன்னால் நேர்ப் பார்வையில்லாது கடைக்கண் நோக்கு ஏன்? அம்மாளுக்குத் திடீரென வயிற்றைக் குமட்டியது. "குடு குடு வென்று முற்றத்திற்கு ஓடினாள். தொண்டை யைத் திரும்பத் திரும்ப மறுக்கிற்று. வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஐயர் அறையிலிருந்து வெளிவந்தார். 'என்ன உடம்பு?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/178&oldid=741522" இருந்து மீள்விக்கப்பட்டது