பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 நினைத்துக்கொண்டிருக்கிருய் என்ன இருந்தாலும் வளர்ப் புக் குழந்தை நம் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு ஈடாகுமா என்கிருயா அல்லது "அவள் மலடி” என்ற அவச்சொல்லே அழித்துக் கொள்வதற்காகக் குழந்தை கேட்கிருயா?* ஆண் பிள்ளைகளைப் போல பெண்கள் எல்லா வற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடமாட்டார்கள். அப்படிப் பேசவும் கூடாது. ஆண்கள் கலகலப்பாகப் பேசிளுல் அவர்களை விஷயமில்லாதவர்கள் என்பார்கள். பெண்களும் அப்படியே பேசினுல் இவள் சுத்த வெகுளி' என்று இகழ்ந்து தள்ளிவிடுவார்கள். புருஷனுக்குத் தெரி யாத ரகசியங்கள் கூட ஒரு பெண்ணிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அவள் பெண். விரித்த புகை யிலேயும், சிரித்த பெண்ணும் ஆகாது என்று சொன்னது எதற்காக?' கண்ணுத்தாளும் விட்டபாடில்லை. - அது சரி...... இன்றைக்கென்ன இவ்வளவு தத்துவார்த்தங்களைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருக் கிருய்?' - - - - 'இது நீங்கள் படித்துவிட்டுப் பேசும் வேதாந்த மல்ல; உண்மைகளே நான் சொல்லுகிறேன். ஒரு பெண் -அதுவும் குழந்தைப் பேற்றுக்காக தவம் கிடக்கும் ஒரு பெண் என்ன நினைக்கிருள், அவள் மனம் என்ன பாடுபடு கிறது என்பதை புருஷன் தெரிந்துகொள்ள வேண்டாமா ?” நீ உன் வாதத்தில் பிடிகொடுத்து விட்டாய்! புருஷனுக்குத் தெரியாத ரகசியம் ஒரு பெண்ணிடம் இருக்கலாம் என்கிறபோது ஊருக்குத் தெரியாத ரகசியம் ஒரே குடும்பத்திற்குள் இருப்பது தவறில்லையே?’’ புரு ஷ னு க்கு ம், பெண்ஜாதிக்குமிடையே எவ்வளவோ ரகசியங்கள் இருக்கலாம். அதெல்லாம் ஊருக்குத் தெரிந்தால் குடும்பம் உருப்படுமா?' - soldiro சனிக்கிழமை. துறைமுகத் தொழிலா ளர்களுக்கு அன்றுதான் சம்பளநாள். கண்ணப்பன் வட்டிப் பணத்தை வசூலிப்பதற்காகப் புறப்பட்டுப் போனன். விழி யில் அவன் நினைவெல்லாம் கண்ணுத்தாளைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அவளுடைய கலங்கிய விழி களில் துறைமுகப்பட்டணமே. மிதப்பது போல அவனுக் குத் தோன்றியது. ஒவியம் போன்ற தன் மனைவி குழந்தை யில்லர்க்கவலையால் ஒட்டி உலர்ந்து சருகாகி விடுவாளோ என்ற துக்கம் ஒருபக்கம் அவனே அழுத்திக்கொண்டிருந்தது.