பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அவனுக்குப் பிடிக்கும், கையில் ஒற்றைக்கல் வைர மோதிரம் அணிந்திருப்பான்.

இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு அரச குமாரனைப்போல் விளங்கிய சொக்கநாதன் முகத்தில் இப்போது அருள் இல்லை. பூச்சி விழுந்த இலையைப் போல் அவன் முகம் சுருங்கியிருந்தது. அவன் சிரிப்பும் நடவடிக்கைகளும் செயற்கையாகவே இருந்தன. சொக்கநாதன் ஏன் இப்படி ஆகிவிட்டான்? அவன் உடலுக்குள்ளே ஏதாவது நோய் புகுந்து கொண்டு அவனே ஆட்டிப் படைக்கிறதா?- கண்ணப்பனுக்கு இப்படியெல்லாம் ஒரு சிந்தனை.

'சொக்கு!'

'வந்திட்டேன்'

'என்ன உன் உடம்புக்கு? ஏதாவது வைத்தியம். செய்து கொள்வது தானே?" -

'அப்படி ஒன்றுமில்லே! எல்லோரும் என்னை இங்கு வந்ததும் இப்படித்தான் கேட்கிறார்கள். எனக்கு ஏதாவது வியாதி இருந்தால்தானே வைத்தியம் செய்து கொள்வதற்கு?’’

அப்போதுதான் கண்ணப்பன் விளங்கிக் கொண்டான்!

சொக்கநாதன் நன்றாகக் குடித்திருந்தான். அவன் பேசும் போது சாராய நெடி கண்ணப்பனின் மூக்கைத் துளைத்தது.

 

7சுபத்ரா! இவள் அழகானவள்; மிகவும் அழகானவள். அவள் தோற்றம் காண்போர்களை உறுத்தக் கூடியது. சுபத்ரா இ. பி. ஏ. பட்டம் பெற்று " விட்டு வேலைக்காகக் காத்திருந்தாள்.

சுபத்ரா இசையிலும் வல்லவள். சின்ன வயதிலேயே அவள் வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டாள்.