பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உனக்கு இன்று கிடைக்கப்போவது பெண் குழந்தைதான். குழந்தை மிகவும் அழகானது. சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம் இறைவன் அந்தக் குழந்தையிலேயே திணித்திருக்கிறான் கன்னத்தில் ஒரு மச்சம்; குங்குமச்சிமிழ் போல் குவிந்த மூக்கு: வைரக்கற்களுக்கு மத்தியில் நீலம் பதித்தது போல ஒளி பொருந்திய விழிகள்"

பெற்றோர்களைத் தெரிந்து கொண்டால் நன்றி கூறலாம்!”

"அந்த வகையில் குழந்தை துர்பாக்கியசாலி: தாயார் இறந்துவிட்டாள். சுபத்ரா அவள் பெயர்!"

"சுபத்ரா!"...ஒரு கணம் யோசித்தான். சசியின் தங்கை பெயர் சுபத்ராதானே! அவளாகத்தானிருக்கும். மனதுக்குள்ளே ஒரு அரிப்பு!

"ஏன் டாக்டர், அந்தக் குழந்தைக்குத் தந்தை என்ன ஆனார்?"

"அவன் ஒரு பெரிய பணக்காரனாம்! இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருச்செந்தூர் கோயிலில் திருமணம் நடந்திருக்கிறது"

"அவர் ஏன் இவளைக் கைவிட்டான்? சுபத்ரா ஏதாவது விபரம் சொன்னாளா?"

"உனக்கு எதற்கு அந்த ஆராய்ச்சி எல்லாம்? ரிஷிமூலம் எவ்வளவு அருவருப்பானதோ அதைவிட ஆஸ்பத்திரியில் வாங்கும் குழந்தைகளின் பூர்வீகம் அருவருப்பானது' என்றார் டாக்டர் கொரியன்.

பொங்கி வழியும் பூப்போடு, கண்ணாத்தாளை அழைத்துவருவதற்காக கண்ணப்பன் காற்றாய்ப் பறந்தான், எர்ணாகுளத்திற்கு.

"கண்ணா"

மகிழ்ச்சியோடு வரவேற்றாள் கண்ணாத்தாள்.

"ஊருக்குத் தந்தி கொடுக்க வேண்டியதுதான்: உனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது; தாயும் சேயும் நலம்!’ என்றான் கண்ணப்பன். அவன் உள்ளம் தர்ம யுத்தத்தில் வெற்றி கண்டவனைப்போல் உவகையில் திளைத்து விட்டது.

"புறப்படு! இப்பவே நாம் திருவனந்தபுரத்திற்குப் புறப்படவேண்டும். அங்கு புத்து நாட்கள் படுக்கையில் இருக்கவேண்டும்!" ஊரிலிருந்து எல்லோரும்