பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

 அதிநவீனமானதும், அநீதமானதுமான இன்றையக் ‘கம்ப்யூட்டர் யுக’த்திலே பெண் ஒருத்தி ‘மணமகன் தேவை’ என்பதாக நாளேடுகளிலே விளம்பரப்படுத்துவது கொச்சையான செய்தி அல்ல! - கொச்சைப்படுத்த வேண்டிய தகவலும் இல்லை!-கொச்சைப்படுத்தப்பட வேண்டிய விஷயமும் அல்லதானே?

டாக்டர் ரேவதி செய்த விளம்பரங்களுக்கு இணங்கிப் புகைப்படங்கள் சகிதம் வந்த விண்ணப்பங்கள்-மனுக்கள் எத்தனை தெரியுமோ?-680.

ஆனால், அவளுக்கு ஒரேயொரு மணமகன்தான் தேவை! - அவள் தமிழ்ச்சாதிப் பாவை! அவள் எட்டுப் பேர்களைத் தேர்வு செய்து தாக்கல் அனுப்புகிறாள்! ‘எனக்கு நான்தான் விதி! அதனாலேதான், இப்படிச் செஞ்சேன். சோதனையோட நல்லதும் கெட்டதும் எனக்குப் புரிஞ்ச புதிர்தான். அதுவேதான் இந்த ரேவதியோட ஜாதக விசேஷம்!...அதுவேதான் ரேவதி... டாக்டர் ரேவதி! விதின்னு ஒண்ணு இருந்தால் கூட, அதோட வறட்டு ஜம்பம் என் கையிலே சாயவே சாயாது!...’ அவள் எண்ணுகிறாள் இப்படி: எக்காளச் சிரிப்பு சீறுகிறது; சிதறுகிறது. சிரித்தது அவள்தான்!-விதி அல்ல! விதி சிரிப்பதாகச் சொல்வதெல்லாம் அசல் பொய்!

உணர்வுகள், மன உணர்வுகள் மண உணர்வுகளாகித் தாயம் ஆடுகின்றன.

டாக்டர் ரேவதியின் மனவோட்டம் உள்வட்டம் சுழித்து மேலும் ஓடுகிறது; மென்மேலும் ஆடுகிறது!-‘எல்லா வகையிலும் என் மனத்துக்குப் பிடித்தமான ஒருவரை-எனக்கு எல்லா வழியிலும் பொருத்தமான ஒருவரை-எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுப்பேன், நான்! என்னால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற அம்மனிதர், ஊரறிந்த என்னுடைய உயர்வு மனப்பான்மையை உணர்ந்தும் மதித்தும் போற்றியும் நடக்கத் தெரிந்தவர்தான் என்று நான் நம்பினால்தான், அந்த மனிதர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி எனக்கு நாயகனாகவும் ஆக முடியும்! ஆமாம்; இது என் வாழ்க்கைப் பிரச்னை! - மற்றப்படி, ஊர் உலகத்தைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது! தவிரவும், சுதந்திரப் பறவையான இந்த