பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. மனத்தின் குரல்


விடியலுக்கு விடிமோட்சம்.

ரேவதி நீராடினாள்; நீறு தரித்தாள். புதிய சேலையும் சோளியும் இளகிய மஞ்சள் இழைகளில் பளிச்சிட்டன.

புதிய உணர்வுகளில் புதிதாக உள்ளத்தைப் பெற்றுவிட்டதைப் போல, மகிழ்ச்சியில் திளைத்தாள். ராகம் புரிந்து விட்டது. சுகமான தேவமனோகரி ராகம் இனிமையாகப் பண் சேர்த்தது. அப்புறம் அவள் பம்பரமாகச் சுழலக் கேட்க வேண்டியதே இல்லை!

குழலியை மனமில்லாமலே எழுப்பினாள். குளிக்கச் செய்தாள். அந்த நாளில் அவளுக்காக எடுத்திருந்த புதுப் பாவாடை, சட்டை, தாவணியை கொடுத்து அணிந்துகொள்ளவும் வைத்தாள். குழலியின் கழுத்தில் அசிங்கமாகத் தொங்குகிற கோல்டு கவரிங் சங்கிலிக்குப் பதிலாக அசல் தங்கத்திலே ஒரு சங்கிலியையும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்!

காலைச் சிற்றுண்டி முடிந்தது.

பூவையர் மணத்தனர்.

“குழலி, இன்றிலிருந்து நீ என் செயலாளர். அதற்கான நியமன உத்தரவு இது; இந்தா!" என்று செல், 'டைப் ' செய்யப்பட்டிருந்த ஓர் உறையை நீட்டி டாக்டர் ரேவதி.