உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி - ᏮᏭ

இங்கேயானால் பாலு ஜாடைமாடையாகத் துரத்துகிறான். பூரணி.க்குத் துரோகம் பண்ணிக்கொண்டு எப்படி இவனால் இப்படி இருக்க முடியறதோ? ஊருக்குப்போனால் சாயிராம் வந்து விடுவான். அரசல் புரசலாக இல்லாமல் தன் வாழ்க் கையில் குறிக்கிட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்களும் வில்டியத்தை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எங்கேயாவது கண்காணாத ஊருக்குப் பட்டப்பாவுடன் போய்விடவேண்டும். இப்போதெல்லாம் ஒரு விரக்தி மனசில் படிந்து விட்டது.

எவனேப் பார்த்தாலும் மனம் மரத்துக்கிடக்கிறது. நர்மதா யோசித்தாள். *