உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அவள் விழித்திருந்தாள்

பிடித்து ஆட்டுவதுபோல் உணர்ந்து அதிலிருந்து விடுதலை

பெறத் துடிப்பவர்கள்.

அவன் ஒருநாள் மணிகர்ணிகை கட்டத்தில் இருந்தான்். இன்னெரு நாள் கேதர் கட்டத்தில் இருந்தான்். அடுத்த நாள் ஹரிச்சந்திர கட்டம். அப்புறம் ஹனுமான் கட்டம் இன்னோருநாள் அஸ்ஸி கட்டம், ஆஞ்சநேயர் கோயிலில் உட் கார்ந்திருந்தான்்.

அந்தக் கட்டத்தில் பிணம் தின்னும் கழுகுகள் பிணங்களைக் கொத்தித்தின்பதை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தான்்.

'உடம்புக்கு இவ்வளவுதான் மதிப்பு? அதான்் நர்மதா சொன்னாளே. திடும்மென்று அ வ ன் அவளுக்குக் கடிதம்

எழுதினான்.

இரண்டு மாதங்களுக்குப்பிறகு அவளுக்குக்கடிதம் வந்தது.

நான் உயிரோடு இருக்கிறேன். நீ சுமங்கலி தான்் பயப்படாதே. நான் எங்கங்கோ அலைந்து கொண்டிக்கிறேன். இதை ஒரு சோதனைபோல நடத்தவே அங்கி ருந்து கிளம் பினேன். என்னுடைய பிரிவுக்கு அப்புறம் உன் மனசிலே படியப்போகும் எண்ணங்கள் வேறாக இருக்கலாம் என்று எனக்குள்ளே ஒரு அனுமானம். அது பொய்யோ, நிஜமோ, நான் காசிக்குப்போய் இருத்தேன். இந்த ஷத்ரத்தில் சங்க மிருக்கும் மனோ விகாரங்கள், மனே லயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனுஷாள்ளே முக்கால்வாசிப்பேர் நிம்மதிக் காக அலைவதும் புரிந்தது ஏதோ ஒரு குறை எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. எனக்கு எப்போதாவது திரும்பி வர வேண்டும்போல் இருந்தால் ஊருக்கு வருவேன். இல்லையென் றால் இல்லை. எ ன் கையில் கொண்டுவந்த பணம் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதுவும் செலவழிந்து விட்டால் அப்புறம் என்ன பண்ணுவேன் என்று யோசிப்பாய். பரந்த இந்த நாட்டில் எ ன் பொழுது எப்படியோ போய்விடும். எங்காவது வேலைசெய்வேன், கர்மண்யவே அதிகாரா ய..." என் கிறான் பகவான். வேலைக்குக் கூலிகிடைக்க அவன் பார்த் துக்கொள்வான். உன்னோடு வாழ்ந்த இந்த ஆறேழு வருஷங் கள் என் வாழ்க்கையில் இனிமையான காலம் அதற்கு முன்பும் நான் அவ்வளவு இனிமையோடு இருந்ததில்லை பின்பு எப்படி இருக்கப் போகிறோனோ. நர்மதா! என் இனியவளே! புண்ணிய நதியின் பெயரைத் தாங்கியவளே! அவளைப்போல

புனிதமானவள் நீ. நன்றாக இரு'