100■பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்
129. அதேபோல நீதி நூல்களுக்கும், சமயத் தொடர்பா நூல் இருக்கிறதுக்கெல்லாம் நிறைய உரைகள் வந்துருக்குங்க, அதாவது சாஸ்திரங்களுடன்...
அதற்குக் காரணம் புரியலேங்கிறதுதான்.
130. இலக்கியத்துல பலகுரல் தன்மை இருக்கனும்கிற ஒரு கான்செப்ட் சொல்lங்க நீங்க.
ஆமாம்.
31. அது வந்து சங்க இலக்கியத்தைவிடத் திருக்குறளிலே அதிகம் இருக்கு. நீதி நூல்களுக்கும், சமயம் சார்ந்த சாத்திரங்களுக்கும் இருக்கு.
பலகுரல் தன்மை என்று எப்படிச் சொல்ல முடியும், அதை?
132. அதுக்கு ஒரு ஸ்கோப் வைச்சுச் சொல்றது...
இரண்டையும் ஒன்றாக்காதீர்கள். திருக்குறளில் யுனிவர்சாலிடி இருக்குது. அதுல நீங்க பல குரல் தன்மை சொல்லலாம். அறநெறிச் சாரத்துல என்ன போட்டுச் சொல்லுவிர்கள்? அது தமிழ்நாட்டிலுள்ள ஒரு group of people. அவர்களுக்காகப் பண்ணப்பட்டது. மனுஸ்மிருதி அங்கே இருக்கிற சில வைதீகப் பாப்பானுக்காக ஏற்பட்டது. Gupta period did not accept it. ஆகையினால் என்ன ஆயிற்று? குப்தா பிரியட்ல; Buddhist influence அதிகம் ஆகி, ஹிந்துயிஸம் அழியிற காலம். அப்ப ஊர்ல உள்ள பாப்பான் எல்லாம் போயிட்டான். எழுதுன புராணங்களிலே புகுந்து விளையாடிப்புட்டான். அவன். அப்ப விளையாடினது என்னன்னா ஹிந்துயிஸத்தைப் பரப்பனும். அது arithmetic கூட இருக்கலாம். Nobody bothered about it. அந்தச் சூழ்நிலை உருவாகும்போது அது மாதிரி தோன்றுகிறது இலக்கியம். நீங்க அறநெறிச்சாரம்,