பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்7



விட்டால் அதற்குரிய சூழ்நிலையில்தான் அது இயங்க வேண்டுமென்பது இந்த நாட்டினுடைய கொள்கை. ப்ரபோத சந்திரோதயம் என்ற அற்புதமான நூலிலே நிர் குணப் பிரம்மத்தைப் பற்றிச் சொல்வார். நிர்க்குணப் பிரம்மம் கூடச் சகுணப் பிரம்மமாக வந்துவிட்டால் இந்த மனிதர்க்குரிய எல்லாப் பண்புகளையும், நலம்-தீங்கு இரண்டையும் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பது இந்த நாட்டினுடைய வலுவான கொள்கை. அந்த முறை யிலே பரம்பொருள் இராகவனாக அவதரித்த பின்பு மனிதர்களுக்குரிய பல செயல்களை அவன் செய்து காட்டுகிறான். இனி மானின் பின்னே போனது கூட ஒரு வேடிக்கையான செயல்தான். இலக்குவன் மானைப் பிடித்துத் தருகிறேன் என்று சொல்லும்போது பிராட்டி இராமனிடம் சொல்கிறாள்...

'நாயக! நீயே பற்றி நல்கலை போலும்

என்று. அப்படியானால் நானே பற்றித் தருகிறேன் என்று போகிறானே, இது பரம்பொருளுக்குரிய இலக்கணமா? மனிதர்களுக்குரிய இலக்கணம். அப்படிப்பட்ட இலக் கணத்தோடு இராமனைப் படைத்ததனாலேதான் நாம் அவனோடு உறவு கொண்டாட முடிகிறது. இராகவனைப் பொறுத்தமட்டில் நம்மில் ஒருவனாக நினைக்க முடிகின்றது. அந்த முறையில் கம்பன் செய்தது சரிதான்.

7. கம்பனின் கால கட்டம் எவ்வாறு நிர்ணயிக்கப்பெற்றது?

பிரச்சினையான கேள்வி. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பல கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தந்த ஒன்று இது. இப்பொழுது ஒருவாறாக 9ஆம் நூற்றாண்டு என்பதாக அறிஞர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதற்குரிய காரணம்- இலக்கியத் திறனாய்வு