பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்■13
பிராட்டி அதைச் செய்யவில்லை. மிக ஜாக்கிரதையாகத் திருச்செவி சாற்றுவாய் என்கிறாள். ஆக, இதிலே அவர்கள் இரண்டு பேருடைய பெருமையும் மலைபோல உயர்ந்திருக்கிறதே தவிர நீங்கள் நினைப்பதுபோலக் குறை ஒன்றும் இல்லை.
11. 'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்' என்கிற பாடலில், எரியிடைக்கடிது வீழ்ந்து இறப்பேன் எனப் பிராட்டி கூறுவது, இந்தக் கால கட்டத்தில் பெண்கள் நம்மை மிரட்டுவதற்காக ஒரு சொல்- எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்களே- இதற்கு முன்னோடி யாகச் சீதாபிராட்டி இருந்தாள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது சரியா?
பிராட்டியைக் கொண்டுபோய் நம்மோடு சேர்க்க வேண்டிய தேவையில்லை. அவள் இருக்கட்டும்.
எப்படிப்பட்ட சூழ்நிலை என்று தெரியவேண்டும். அன்புக் கண்ணாடி போட்டுவிட்டால். பயில்வானாக இருப்பான் மகன்- ஆனால் அவன் ஒரு தவலையைத் தூக்கினான் என்றால் அவன் தாய், அடடே தூக்காதேடா, மூச்சைப் பிடிச்சுக்கும் என்பாள். இது அன்பினாலே விளைந்த ஒன்று. அப்படிப் பிராட்டியைப் பொறுத்த மட்டில்-இராகவன் பரம்பொருளாக இருந்தாலும் அவளைப் பொறுத்தமட்டில் கணவன். தன் கணவனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று நினைக்கிறாளே தவிர இலக்குவனைப் போலப் பெருமானை எடை போடுகின்ற சூழ்நிலையிலே மனைவி இருக்க முடியாது.
நன்றாகக் கவனிக்க வேண்டும். இலக்குவன் சொல்கிறான். யாரென நினைத்தீர் அக்கமலக் கண்ணனை என்று. நீங்கள் கல்யாணம் செய்துகொண்டீர்களே அந்தப்