பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



பெருமான் யார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வில்லையே' என்று வருத்தப்படுகிறான்.

தெரிந்துகொள்ள முடியாது. அவள் அன்புக் கண்ணாடி போட்டிருக்கிறாள். ஆகையினாலே இதிலே நீங்கள் நினைக்கிறபடி இந்தக் காலம், அந்தக் காலம் ஒன்றும் கிடையாது. அவளுடைய சூழ்நிலையிலே இந்த முடிவு நியாயமானது. அவளைப் பொறுத்த மட்டிலே பரம்பொருள் என்று நினைக்கவில்லை. அவளுடைய கணவன்- அவனுக்கு ஒர் ஆபத்து- இப்போது மற்றொரு ஆண்மகனாகிய இவன் போய்க் காப்பாற்றவில்லை என்றால் வேறு என்ன இருக்கிறது. வெருவலை' என்று சொல்கிறாள். 'லட்சுமணா என்ற சொல் கேட்டவுடன் உன் உடம்பு பதறி இருக்கணும். உதறவில்லையே' என்று கேட்கிறாள். அவளைப் பொறுத்தமட்டில் உதறுவதுதான் நியாயம். இளையபெருமானைப் பொறுத்தமட்டில் இராமன் இன்னார் என்று தெரிந்தவன். அதனாலே உதறுகிற பிரச்சினை இல்லை. அவ்வளவுதான்.

12. இராமபிரான் வாலியைக் கொல்வது குறித்து எடுத்த முடிவு அவசரமானது என்பது சிலர் கருத்து. இதனை அரண் செய்வதுபோலக் கவிச் சக்கரவர்த்தி பாடிய இடம் ஒன்று உண்டு.

பரிவு இலன் ஒருவன் தன் இளையோன்

தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ?

- என்பது கவிச்சக்கரவர்த்தி வாக்கு. எனவே, வாலியைக் கொல்வது குறித்து இராமபிரான் எடுத்த முடிவு அவசரமானது என்பது கம்பருக்கும் உடன்பாடாகும் என நாம் கூறலாமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/22&oldid=480912" இலிருந்து மீள்விக்கப்பட்டது