பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்15இந்தக் கருத்தை ஒரளவுக்கு நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவசர முடிவு என்று சொல்வதைவிடச் சூழ்நிலை காரணமாக அவன் எடுத்த முடிவு என்று சொல்லவேண்டும். அந்தச் சூழ்நிலையை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

கை அறுதுயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம் என்று சுக்கிரீவனிடத்தில் இராமன் பேசுகிறான். இதை விட வருந்ததக்க கூற்று (Statement) இராமாயணம் முழுவதிலும் கிடையாது. அதை, காதில் வாங்கிக் கொள்ளாமல் சுக்கிரீவன் என் அண்ணன் அடிச்ச அடியைப் பாரு' என்று தன்முதுகைத் திருப்பிக் காட்டுகிறான். இராமபிரான் வருந்துகிறான்- இப்படி ஒரு பரிதாபகரமான ஜந்துவா? என்று. அந்தச் சூழநிலையிலே அவனுடைய மனம் முழுவதும் எதிரிலே இருக்கின்றவனுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்துக் கலங்கிவிடுகிறது. அப்பொழுதுதான் சுக்கிரீவன் சொன்னதையெல்லாம் கேட்டவுடனே ஒரு முடிவு- யார் எதிரி என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை இராகவன் அதனாலேதான்,

...வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார்- உன்னோடு உற்றவர்

எனக்கும் உற்றார் உன் கிளை எனது...'

என்று சொல்கிறான். இது அவசரம் என்பதைவிட உணர்ச்சிப் பெருக்கிலே ஏற்பட்ட ஒரு முடிவு. அது எல்லாருக்கும் உரியதுதான். கையறு துயரத்தோடு வந்திருக்கிறான். தன்னைவிடத் துயரம் அடைந்திருப்பவனைப் பார்க்கிறான். சாதாரண மனிதனாக இருந்தால் 'நான் இதைச் சொல்லும்போது அவன் காதில் வாங்கிக்