பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101
சித்தாடை கட்டிக் கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்!
அத்தானைப் பார்த்து-அசந்து
போயி நின்னாளாம்! (சித்தாடை)


முத்தாத அரும்பெடுத்து
முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்!
எத்தாகப் பேசி
இளமனசைத் தொட்டானாம்! (முத்தாத)


குண்டுசி போல ரெண்டு
கண்ணும் உள்ளவளாம்-முகம்
கோணாமல் ஆசை அன்பாப்
பேசும் நல்லவளாம்!
அந்தக் கண்டாங்கி சேலைக்காரி
கை காரியாம்!
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம்
பண்ணிக் கொண்டாளாம்! (சித்தாடை)


அஞ்சாத சிங்கம் போல
வீரம் உள்ளவனாம்!-யானை
வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்!