பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214உருளும் பணம் முன்னே!
உலகம் அதன் பின்னே!
தெரிந்து நட கண்ணே!
திறமையுடனே!


உல்லாசமும் சல்லாபமும்
சொல்லாமலே தன்னால் வரும்!
எல்லோரும் நம்மைக் கொண்டாடவே
இல்லாத பெயர் எல்லாம் தரும்!
உள்ளதைக் கோட்டை விட ஆளிருக்கும்போது!
சில்லறைப் பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது?
கண்ணாலே ஜாடை காட்டு!
உன் கையைக் கொஞ்சம் நீட்டு!
உன் எண்ணம் போல இன்ப வாழ்வு வந்து சேரும்!
தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும்
துள்ளாட்டம் போட ஆசை வரும்!
ஒய்யாரிகளின் நேசம் தரும்!
மெய்யான சுகவாசம் பெறும்!