இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
237
- பார்க்காத புதுமைகளெல்லாம்
- கண்ணாரப் பாரடி பொம்மி!
- கேட்காத சங்கதி யெல்லாம்
- காதாரக் கேளடி பொம்மி!
- ஆம்பளெ வந்து ஆடிப்பாடினா
- அவனுக்கு பைசா கெடைக்காது!
- அழகுப் பொம்பளெ ஆடிப்பாடினா
- அதுக்குக் கெடைக்குது பணம் காசு!
- அரும்பு மீசையில் கையைப் போடுது
- அங்கே பாரு! ஒரு கேசு!
- குறும்பாப் பாத்துப் பல்லை இளிக்குது
- கூறு கெட்ட ஒரு முண்டாசு!
- (பார்க்காத)
- கூறு கெட்ட ஒரு முண்டாசு!
- தெருவுக்குத் தெருவு சந்திக்கு சந்தி
- டிங்கி அடிக்கிற ஒரு கூட்டம்!
- இருக்கிற இருப்பெ பொழப்பையும் மறந்து
- இங்கு செய்யுமாம் ஆர்ப்பாட்டம்
- வரவுக்கு மிஞ்சி செலவுகள் பண்ணி
- மஜா தேடுற ஒரு கூட்டம்
- இரவு ராணிகள் வலையில் விழுந்து
- ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்!
- (பார்க்காத)
- ஏங்கி நிக்குமாம் குரங்காட்டம்!