பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
258
அடிக்கிற கைதான் அணைக்கும்
(வசனம்) ஏய்! பாடுடி!
அடிக்கிற கைதான் அணைக்கும்!
அணைக்கிற கைதான் அடிக்கும்!
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்! -
(வசனம்) ம்! ஆடுடி (அடிக்கிற)
புயலுக்குப்பின்னே அமைதி!
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி!
இருளுக்குப் பின் வரும் ஜோதி!
இதுதான் இயற்கை நியதி!
(வசனம்) பலே! (அடிக்கிற

}

இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்!
விதைக்கிற விதைதான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
(வசனம்) சபாஷ் அஹஹ!
(அடிக்கிற)
வண்ணக்கிளி-1959
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்