பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
266
தொகையறா

உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் முழு மோசக்காரன் தானே முடிவில் நாசமாவான்!

பாட்டு

அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போகநேருமே!

தொகையறா

வேஷங்கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு மோசமும் போன பின்னால் மனவேதனை

யடைவதாலே லாபமென்ன?
பாட்டு

பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும்

நம்மையே

கடிக்கத்தான் வந்திடும் அதை அடிச்சே கொல்ல

நேர்ந்திடும்!
மந்திரி குமாரி-1950


இசை : G. ராமநாதன்

பாடியவர்: T. M. செளந்தரராஜன்-