உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

105


பழையபடியும் கால்கள், தானாக என்னை இழுத்துக் கொண்டு சென்றன. கால் முன்நோக்க, வயிறு பின்நோக்க, அசிரிச் சோறு ஒன்றை மட்டும் குறியாகக் கொண்ட லட்சிய உந்தலில் நடந்தபோது, ராமகிருஷ்ண புரத்தில் உள்ள, உத்திர சுவாமிமலைக் கோவில், நான் பார்க்காமலே என் கண்ணில் முட்டியது. அப்போது நான் முருக பக்தன் அல்ல; அதேசமயம் முருகனை நினைக்காமலும் இருந்ததில்லை. டில்லியில் மண்டிக் கிடந்த பாகவதர் கிராப், ஹிப்பிகளைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு முருகனின் நினைவு வரத்தான் செய்தது.

உத்திரசுவாமி மலையின் அடிவாரத்துக்கு வந்தேன். 45ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து, கரோல்பாக் போக நினைத்த எனக்கு, மலையேறி, கோவிலுக்குப் போக வேண்டும் போலி ருந்து. பக்தி மட்டும் காரணமல்ல. பிரசாதம் கிடைக்கலாம். அதாவது அரிசிப் பிரசாதம், தண்ணிரைக் குடித்து வயிற்றைப் பூசணிக்காய் ஆக்கி விட்டால், அன்று அழுகிய பூசணிக்காயை அண்ட வேண்டியதில்லையல்லவா?

முட்டிகளைப் பிடித்துக் கொண்டே, படி ஏறினேன்.

"அப்பனே ஆறுமுகா!
 அரிசிச்சோறு கிட்டாதா?
 சப்பாத்தி தட்டிவிட்டு
 சாம்பார் சாதம் தந்தாக்கால்
 சுப்பனே! குப்பனே! - இந்த
 சுப்பிரமணியன் உன்னடிமை"

என்று பாதி தமாஷாகவும், பாதி ஸ்பீரியஸாகவும், மனத்துக்குள்ளேயே, நானே கவிதையெழுதி, நானே மொட்டையடித்து, நானே மனத்துக்குள் பாடி, காதுக்குள் கேட்டு, கர்ப்பக் கிரஹத்துக்குள் வந்து, மூலஸ் தானத்துக்குப் போனேன். அங்கேதான், பிரசாதம் கிடைக்கும்! அன்று வெள்ளிக்கிழமை, நல்ல கூட்டம். இன்கிரிமென்டுக்காக வந்தவர்கள், எபிஷியன்ஸி பாரைத்