பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 137 அழுதாள். அவளுக்கு 'டாவு' காட்டிய சிறுமிக்குக் கருணை பிறந்தது. "அழாதேமே. உன் ஆத்தா பேரு என்ன. ஊரு என்ன, சொல்லு கண்ணு?" என்றாள். 'என்னோட அம்மா பேரு பூவம்மா... கொத்தார ச்சாவடில மீன் வித்துக்கினு இருந்தா... பொட்டுன்னு பூட்டா..” என்றாள் சுந்தரி. ஏழு வயதுச் சிறுமிக்கு வியப்புத் தாங்க முடியவில்லை. 'அடி. நான்தாண்டி ஒன் ஆத்தா. நானும் என் ஆத்தாவை தேடிக்கினு இருக்கேன்." சுந்தரிக்கு, தன் அம்மாவை ஏழு வயதில் பார்த்தது, இனிப்பைத் தரவில்லை. அவள், பொய் சொல்வதாக - தன்னைத் தேற்றுவதற்கு அவள் கண்ட உபாயமாகக் கருதி, முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் அம்மா - ஏழு வயதுச் சிறுமி பூவம்மா, அவளைப் பற்றிச் சிந்திக்காமல், தன் அம்மாவையே தேடும் வேலையில் ஈடுபட்டாள். அத்தனை ஆன்மாக்களும், அன்னையை நினைத்ததால் குழந்தைகளாயின. ஆனால், குழந்தைகளாக நிற்கும் தத்தம் அன்னையரை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அத்தனை ஆன்மாக்களும், "அம்மா. அம்மா...' என்று அழுதன, “எங்கேம்மா இருக்கிறே, எங்கேம்மா" என்று புலம்பின; "வாம்மா. வாம்மா." என்று வாடின; “தாயே.. தாயே..." என்று கதறின. திடீரென்று. அத்தனை ஆன்மாக்களையும் மேல் நோக்கி புவிஈர்ப்பு விசை போன்ற பிரபஞ்ச ஈர்ப்பு இழுத்துக் கொண்டே சென்றது. சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ என்று புரியாமல், ஆன்மாக்கள் புலம்பின.