பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 139 இதுவோ என்பவைகளுக்கெல்லாம் மூலமாகவும், அப்பாற்பட்டும் தோற்றம் காட்டும் அந்த ஜோதி, ஆன்மாக்களுடைய அன்னையர் உருவங்களாகக் காட்சியளித்துக் கொண்டே இருந்தது. அந்த ஆன்மாக்கள் கண்கொள்ளும் வரை காட்சி காட்டியது. பின்னர் - ஒவ்வொரு ஆன்மாவிற்கும், ஒவ்வொரு தாயாக காட்சி அளித்த அதே தாய், மீண்டும் பேரண்டப் பேரொளி பிரளய சக்தியானது. ஆன்மாக்களுக்கு, அநேகமாக புரிந்திருக்கலாம், ஆனந்த விகடன், 7-3-1976