பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் #67 முதுகு காட்டி, மொட்டை மாடிக்குத் தாவுகிறேன். நின்ற இடத்திலேயே நின்று சுற்று முற்றும் பார்க்கிறேன். வீட்டுக் காகங்கள், என்னை அடையாளம் கண்டதுபோல், காததிர கத்தியபடியே பறந்தோடி வருகின்றன. பகைப் பார்வையாய் பார்க்கின்றன. நானோ, அவற்றின் அறியாமைக்காக சிரித்தபடியே, கடலைப் பொட்டலத்தைப் பிரித்து உள்ளே இருந்ததை குவியல் குவியலாய் தரையில் போடுகிறேன். காகங்கள் நிதானப்படுகின்றன. நான் நிற்கும் வரை கடலைகளை நெருங்காது என்ற அனுமானத்திலும், காக்காபிமானத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்திலும், எனது அறையை நோக்கி நடந்தபோது திடீரென்று, தலை, சுழல்கிறது. முடிக்கற்றையால் கபாலம் இழுபட்டு மூளை பிசிங்கியதுபோன்ற பிரமை நிமிர்ந்து பார்க்கிறேன். முன்பெல்லாம் ஒரு கள்கம் தாக்கும் இன்னொன்று வேடிக்கைப் பார்க்கும் இப்போதோ, அந்த இரண்டும் ஒருசேர்ந்து, மீண்டும் தாக்கப்போவதுபோல், என் தலையைச்சுற்றிப் பறக்கின்றன. தலையில் ஒரு குட்டு. பிடறியில் ஒரு கீறல். நான் தலையை நிமிர்த்தினேன். உடனடியாய் அதை குனித்துக் கொண்டேன். இல்லை என்றால், என் கண்கள் இரண்டும், அந்த காகங்களின் கால் இடுக்கிற்குள், சின்னஞ்சிறு முட்டைகளாக சிக்கியிருக்கும். ஒருவேளை இந்த காகங்கள் அவற்றை கொத்திக்கூட தின்றிருக்கலாம். நான் நிரந்தர குருடாகியிருக்கலாம். இன்றைக்கு கண்கள் தப்பிற்று. நாளைக்கு எப்படியோ. ஒருநாள் போல் ஒருநாள் இருக்காது. என் நினைப்பும் நடப்பும், என்னை உக்கிரப் படுத்துகின்றன. வக்கிரப்படுத்துகின்றன. என் நட்பு அதே பரிணாமத்தில் பகையாகிறது. சிரிப்பு, சினமாகிறது. பார்வைக் குளிர்ச்சியில் நெருப்பேறுகிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறேன். ஐந்தடி நீளமுள்ள ஒல்லிக் கம்பிகள் வரிசைப் படுத்தப்பட்டு கீழே கிடக்கின்றன. இந்த மாடியை கட்டியபின், மிச்ச மீதமான கம்பிகள். இவற்றில் ஒன்றை