பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

&Ꭶ. சமுத்திரம் 169 உரசி உரசி, சத்தமிட்டன. வீசிய வீச்சில் ஒரு சில ஒலைகள் இரண்டாய் மடிந்தன. குத்திய குத்தில் லேசான முனங்கல்கள். காக்காய் குழந்தைகளோ என்னமோ... எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இந்த ரவுடிக் காகங்களை இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்தாக வேண்டும். இதற்குள், இந்த காகத்தம்பதியின் அவலக் குரல்கேட்டு, அத்தனைக் காகங்களும், அந்த இடத்திற்கு மேலாய் குவிந்தன. ஆகாயமே கறுப்பு மயமானது. கா. கா...' என்று ஒவ்வொரு காவையும் தனிப்படுத்தி ஒலி யாக்கும் காகங்கள், இப்போது, அந்த தனித்துவத்தை காவு கொடுத்து, காக்காவாய்க் கத்தின. இறக்கைகளால் மாரடித்தன. அலகுவாய்களால் ஒப்பாரி இட்டன. சரணம் சரணம் என்பதுபோல் சாய்ந்து பறந்தன. கூலிக்கு மாரடிக்கும் சில காகங்கள், தத்தம் கூடுகளுக்கு திரும்பிப் பறந்து, அங்கே குஞ்சுகளுக்கு ஆபத்தில்லை என்று உணர்ந்து, மீண்டும் திரும்பி வருவதுபோல் ஆகாயத்தில் காக்கா போக்குவரத்து. சின்னச்சின்ன கறுப்பு போர் விமானங்கள், பறப்பதுபோன்ற சூழல். சில காகங்கள், என் தலைக்கு குறிவைத்து பயமுறுத்தின. அந்தக் கம்பி நீண்டதும், பயந்து பறந்தன. நானும் விடவில்லை. காகங்களுக்கு இடையே ஒரு சுற்றும், தென்னையின் ஒலை முடி தலைக்குள் ஒரு சுற்றுமாய் மாறி மாறி, கம்பியோடு சுற்றினேன். அந்தக் கம்பி கரத்தின் தொடர்ச்சிப் போலவும், கரம் அந்தக் கம்பியின் அடிவாரம் போலவும் ஆகிப்போன வேளை. என் தலையை சுற்றிய காக்காக்களின் இருள் வட்டம் சிதைந்து கொண்டிருந்த நேரம். அந்தத் தென்னைமரம், தலையிழந்து, முண்டமாய் நிற்கப்போகிற கட்டம். ஒரு கரம், கம்பிபிடித்த என் கரத்தை பிடித்திழுக்கிறது. நான் உதறிய உதறலில் அந்த கரத்திற்குரிய உருவம் கீழே விழுந்து, என் கால்களை கட்டிப்பிடித்து