பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 ஒன்றிப்பு அந்தப் பிடியின் ஆதாரத்தாலேயே எழுந்து, குதிகாலில் நின்று, என் கையை பின்புறமாக வளைக்கிறது. பழக்கப்பட்ட கரம்தான். பஞ்சைப்போல் மென்மையான கரம், இப்போது இரும்புக் கரமாய் உடும்புப்பிடியாய் உருமாறாமலேயே குணமாறி பிடிக்கிறது. அவள்'தான். கத்துகிறாள். 'உங்களுக்கு என்ன பைத்தியமா? கூட்டுக்குள்ள இருக்குற குஞ்சுகளுக்கு ஆபத்து வந்துடுமோ என்கிற பயத்துலதான், காக்கா உங்கள பயமுறுத்துது. இது பிள்ளை விளையாட்டு. குஞ்சுக பெருசாயிட்டா அப்புறம் அதுங்க யாரோ. நீங்க யாரோ. இப்படி அராஜகம் செய்தால், உங்களுக்கும் இந்த காக்காவுக்கும் என்ன வித்தியாசம்? அக்கம் பக்கம் ஆட்கள் எட்டிப் பார்க்கிறாங்க... எல்லாரையும் விட்டுட்டு, உங்கள மட்டும் இந்தக் காக்காயிங்க அடிக்குதுன்னா. உங்கக்கிட்டயும் எதாவது கோளாறு இருக்கலாம். இத நினைச்சுப் பாருங்க கார்க்கில் போர் வீரன்னு நினைப்பா? பாவம். வாயில்லாப் பிராணிங்க. இதுங்களா உங்களுக்கு எதிரி? நல்ல கூத்து. "அவள்', இன்னும் ஆத்திரம் அடங்காமல் என்னை வெறித்துப் பார்க்கிறாள். முப்பதாண்டு கால பெரிய புராண தாம்பத்திய வாழ்க்கையை, திருக்குறளாய் சொல்லி விட்டாள். அதாவது அவளுக்கும் நான் கோளாறு பிடித்தவன். ஒருவேளை ஜீவகாருண்யத்தில் அப்படிப் பேசியிருப்பாளோ? என்ன கோளாறு என்னிடத்தில்? நான் நல்லவன் அல்லவோ? நான், அவளை யும் அந்தக் காக்கைக் கணக்கில் சேர்த்துவிட்டு, கம்பியை கீழே எறிய வேண்டும் என்ற சுரணை கூட இல்லாமல் என் அறைக்குள், திரும்பினேன். ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். பேசாம இந்த காகம் நம்ம தென்னையில கூடு கட்டியிருக்கலாம் என்று பெண்டாட்டியை தினமும் அடிக்கும் எதிர்வீட்டுக்காரன்