பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 19 "இதுக்கு பதில புைபிளைப் பார்த்தால், எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன்" "நீங்க நினைச்சது மாதிரி எல்லா நாவலும் மோசமில்ல ஆன்ட்டி. இது சாமர்ஸெட் மாம் எழுதின ஹ்யூமன் பாண்டேஜ் என்கிற நாவல். இதுல ஒரு அற்புதமான இடத்த சொல்றேன் கேளுங்க. பிலிப்ஸ் ஒரு நொண்டிப் பையன். அங்கஹlனமானதுக்காக வருத்தப்படுற அவனை, தலைமையாசிரியர், தன் அறைக்கு வரவழைத்து பிலிப்ஸ் தொண்டிக்காலுக்காக நீ வருத்தப்படலாகாது. உலகத்தின் பாவங்களைச் சுமப்பதற்காக கடவுள் சில நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மாதிரி உடற்குறைகளையும், இதர கஷ்டங்களையும் பிறரின் பாவ நிவர்த்திக்காக கிராஸாக கொடுக்கிறார். உண்மையில் பிறர் பாவங்களைச் சுமக்க நீயே தகுதியானவன், வலுவானவன் என்று நினைத்து உன்னைத் தேவன் தேர்ந்தெடுத்ததற்கு, நீ பெருமைப்பட வேண்டும். உன் கால், ஊனமுற்ற பிண்டம் அல்ல, ஆண்டவனின் சிலுவையைச் சு மக்கும் பாவ மரிப்பு அங்கம்' என்று சொல்றார். பாத்திங்களா ஆன்ட்டி எவ்வளவு அருமையாச் சொல்லி யிருக்கிறார். பாருங்க." எலிஸபெத்திற்கு, திடீரென்று தலையில் ஒரு பொறி விலகி, பிறிதொரு பொறிக்கு வழிவிட்டது போல் தோன்றியது. "அருண்” என்று தம்பி மகளை அழைத்தாள். "அந்த ஆட்டோ ரிக்ஷாவை கூப்பிடு” "எங்கே போக வேண்டும் ஆன்ட்டி?” "பக்கத்து ஊருக்கு. குளோரியின் குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம்.” குமுதம் - 2.3.1978