பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் S9 இதைப் பார்த்த புலிக்கு, வேடனின் ஆயுதம் நினைவுக்கு வந்தது. தெய்வப் புலியாக இருந்தாலும் இப்போது தெருப்புலிபோல் அதாவது சர்க்கஸ் புலிபோல் சைவப் பார்வை காட்டியது. இந்த வில்லங்க விலங்குகளின் செயல்களை, ஒரக்கண்ணால் பார்த்தபடியே, முருகப்பனும், ஐயப்பனும், காண்டிராக்டரால் கட்டப்பட்ட அந்த மேல்தளத்தின் ஒட்டைகள் வழியாக உள்ளே பார்த்தார்கள். பார்க்கப் பார்க்க, அந்த தெய்வங்களின் கண்களில் பனித்துளிகள். கேட்கக் கேட்க, கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியம். கீழே நடப்தை, குனிந்து பார்த்தார்கள். குப்புறப்படுத்தும் பார்த்தார்கள். மகிழ்ச்சி தாங்க முடியாமல் மார்தட்டிக் கொண்டார்கள். கீழே தோன்றிய அந்த அரை செவ்வக அறைக்குள், சரிபாதியை மூன்று அறைகள் விழுங்கியிருந்தன. பிளைவுட்டால் தடுக்கப்பட்டு. கண்ணாடியால் அலங்காரம் செய்யப்பட்ட தனியறைகள். வடக்கு அறையின் இடக்குக் கதவில்-அதாவது கதவை நிலை கொள்ளவைக்கும் இரும்பு வளையம் இல்லாத கதவில், பெருமாள் என்ற பெயர்ப்பலகை. அவனை மாதிரியே பத்தாண்டுகாலமாக, அதே இடத்தில் ஆணி வைத்து அடிக்கப்பட்டிருந்தது. தெற்கு அறையில் பழனிச்சாமி என்ற பிளாஸ்டிக் எழுத்துக்கள். நடுவறையில் நாயகம் என்ற காகித ஒட்டல், இந்த சின்னக் கெஜட்டட் அதிகாரிகளான அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் எழுந்தருளும் அறைகளுக்குத் தெற்கே, விசாலமான பெரிய அறை. புஷ்டோரும், புல்டோரும் கொண்ட பூர்ண அறை, அந்த மூன்று அறைகளும், இன்றைய நாகரிகப் பெண்கள் போல் வெளிப்படையாய், தோன்றிய போது, சீனியர் கிளாஸ் ஒன் ஆபிசருக்கான இந்த அறையில் மட்டும், கண்ணாடிச் சுவர்களுக்கு முக்காடு-அதான் ஸ்கிரின் போடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த அறையின் கதவில்