பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XV


அங்கங்கள் விறைத்துப் போகுமுன்,
கணுக்கள் இறுகிப் போகுமுன்,
அன்பாய், கண்ணியமாய்,
அவற்றை ஒழுங்கு செய்யுங்கள்!
அவள் கண்கள் - அவைகளை மூடிவிடுங்கள்!
இமையாமல் வெறித்துப் பார்க்கும் -
ஆனால் அந்தோ, ஒன்றும் காணாவே!

ΧVΙ


ஆற்றுமண் படிந்த அந்தக் கண்கள் -
அந்த பயங்கரமான வெறித்த பார்வை
ஏக்கங் கலந்த அந்த இறுதிப் பார்வை
இனி உளது யாது என்று
அறிய விரும்பும் அசையா நாட்டமோ?

ΧVΙΙ


மன வேதனையால் மாண்டாள்.
இகழ்ச்சியால் துரத்தப்பட்டாள்.
இரக்கமற்ற மனிதத் தன்மை -
எரித்துவிடும் பைத்தியம் -
ஒய்வு தேடச் செய்தன.
மெளனமாய்ப் பிரார்த்திப்பது போல்
அவள் கைகளை வினயத் தோடு
அவள் நெஞ்சில் சேர்த்துவையுங்கள்!

XVIII


அவள் தன் குறையைக் கூறி,
தன் பாவங்களைத் தாழ்மையாய்த்
தன் ரட்சகரிடம் சமர்ப்பிக்கட்டும்.

ஹூட்

79