பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

continuum

105

contrive



Continuum (n) - தொடரியம்.
Contort (v) - வளை,முறுக்கு.contortion (n) - வளைத்தல்,முறுக்கு(உடல்).Contortionist (n)-உடலை வளைத்துக் காட்டுபவர்.
Contour (n) - எல்லைக் கோடு, மட்ட நிலைக் கோடு. contour map-தள எல்லை வேறுபாடு காட்டும் படம். Contour (V) - எல்லைக் கோடு வரை.
contra - எதிர்.contra entries - எதிர்ப்பதிவுகள் (கணக்குப் பதிவியல்).
contraband (n)- கள்ளக் கடத்தல் பொருள், சரக்கு.
contraception (n)- கருத்தடை செய்தல். Contraceptive (n) - கருத்தடைக் கருவி, மருந்து.
Contract (n) - ஒப்பந்தம்.contract (v) - ஒப்பந்தம் செய், நோய்க்குட்படு, திரும்பப் பெறு, சுருங்கு.Contractor (n) - ஒப்பந்தக்காரர். Contractile (a)- சுருங்கும். Contractile tissue - சுருங்கு திசு.Contraction (n) - சுருக்கம்.
Contradict (v) - மறுத்துப் பேசு,முரண்படு. Contradiction (n) - மறுத்துப் பேசுதல், முரண்படல். Contradictory (a) - முரண்பாடுள்ள.
Contradistinction(n)- முரண்பாடு, மாறுபாடு Contradistinguish (v)- மாறுபாடுகளால் வேறுபடுத்து.



contraflow (n) -மாற்றிவிடல் (போக்குவரத்து).
contraindication (n) -தீங்குக்குறி (மருந்து)
contralto (n)- மிகத் தாழ்ந்த பெண் குரல்.
Contrawise (a) - மாறாக,எதிராக
contrary (a) - எதிர்மாறான, பணிய மறுக்கும், contrarily (adv).contrary (n)-எதிர்ப் பொருள்.
Contrast (V)- ஒப்பிட்டு வேறுபடுத்திக் கூறு. (n)- வேறுபாடு, வேறுபாடுள்ள பொருள்.
contravene (V) - சட்டத்துக்கு மாறாகச் செய், எதிர்த்து வாதம் செய்,contravention (n) -எதிரிடை.
Contribute (v)-தன்பங்காக அளி, கூட்டு சேர், உண்டாக்க உதவு. Contributor (n)- பங்களிப்பவர் contribution -பங்களிப்பு contributory (a) -உதவும், பங்காகக் கொடுக்கும் (தொழிலாளி, முதலாளி).
contrite (a) - செய்த தவறுக்கு வருந்தும், தன்னுறுத்தலுள்ள.
Contrive (v) - புனை,அமை,சமாளி. contrived (a) - முன்னரே திட்டமிட்டுச் செய்த, contrivance (n) - கருவி,சூழ்ச்சித் திறம், ஏற்பாடு.