பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

countrified

113

Cousin



countrified (a)- நாட்டுப்புற இயல்புள்ள.
country(n)- நாடு, மக்கள், நாட்டு புறப்பகுதி. பட்டிக்காடு.country dance - நாட்டுபுற நடனம்.country house - நாட்டுப்புற வீடு. Country man - நாட்டுப்புற ஆடவர்.Country woman-நாட்டுப்புறப்பெண்டிர். country side (n) - நாட்டுப்புற பக்கம்.
country (n) -கோட்டம், மாவட்டம், நாட்டுப் பிரிவு.
coup (n) - வியப்பும் வெற்றியுமுள்ள நடவடிக்கை.
coup d'etat (n) - அரசியல் சமுதாய திடீர்ப் புரட்சி, நட வடிக்கை.
Coup de grace (n) - முடிவான அடி.
coup de main (n) சட்டெனத் தாக்குதல்.
coup d'oeil (n)-விரைந்த சுற்றுப் பார்வை.
Coupe (n) - இரு கதவு வண்டி.
couple (n) - இரட்டை, இணை, இருவர், கணவன்-மனைவி, (v) - இரண்டிரண்டாக இணை. Coupling (n) இணைதல்,இணைப்பு.
couplet (n) - ஈரடிச் செய்யுள்,குறட்பா.
coupon (n) - சீட்டு,ஆட்சீட்டு.
Courage (n) - துணிவு,வீரம்.courageous (a) - courageously (adv).
courier (v) -பயணர் வழி காட்டி, செய்தி கடிதங்கள் சேர்ப்போர். courier service - செய்தி கடிதங்கள் சேர்ப்புப் பணி.

course (n) - காலப்போக்கு, திசை, வழி, நடவடிக்கை, பாடத்தொடர் சொற்பொழிவுத் தொடர், விளையாட்டுப்பரப்பு(குழாய்ப்பந்தாட் டம்), பரிமாறல் (உணவு)- ஒரு தடவை). (v) தடையின்றி ஒடு.
Coursing (n)- முயல் வேட்டை.
course (n) பந்தயக்குதிரை.
Court- கூடம்,முற்றம், வழக்கு மன்றம், அரசவை.Court Order - வழக்குமன்ற ஆணை Court poet - அரசவைக் கவிஞர். (v)- காதல் செய்,ஊடாடு, பசப்பு, வசப்படுத்த முயலு. இடர் கொள்.
courteous (a) - நாகரிகமுள்ள,வணக்க இணக்கமுள்ள. courteously (adv).
courtesan (n) - செல்வந்தர் காமக்கிழத்தி, ஆடலணங்கு.
courtesy (n) - நாகரிக நடத்தை, நாகரிகக் குறிப்பு, செய், உதவி. courtesy title -மரபு வழிப் பட்டம்.
courtier(n) - அரசவை உதவியாளர்.
Courtly (adv) - மதிப்பும் மாண்புமுள்ள. Courtliness (n).
court martial (n) - போர்த்துறை ஒறுப்பு மன்றம்.
Courtyard (n)- முற்றம்.
Courtship (n) - காதலாட்டம்,காதலித்தல்.
cousin (n) - அத்தை, மாமன், சித்தி, பெரியன்னை, ஆகியோரின் பிள்ளை, சரிசம வயதுள்ள தொலை உறவினர். cousinly (adv).