பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intense

313

intercourse



intense (v} செறிவான, கடும், உணர்ச்சி வயப்படும்.intensely (adv),intensify(n) - செறிவாக்கு, திண்மையாக்கு. intensification (n) - செறிவாக்கல். intensifier (n) - செறிவாக்கி (இலக்கணம் சொல்:So, Such). intensity (n) - செறிவு, திண்மை. intensive (a} - ஒருமுகப்படுத்திய, முழுமையான. வற்புறுத்தும்.(n) - செறிவாக்கி.intensively (adv), intensive care - தீவிரக் கவனப்பகுதி (மருத்துவமனை) intensive cultivation - தீவிரச் சாகுபடி
intent (a) - ஆவலுள்ள,கவனமுள்ள. (n) - கருத்து, நோக்கம்.intention (n)-உள்நோக்கம், எண்ணம். intentional (a) - வேண்டுமென்றே செய்த. intentionally (adv).
inter (v) - புதை (பிணம்).
interact (v) - வினைப்படு,ஒருங்கிணைந்து செயற்படு, interaction (n) - இடைவினை, ஒத்துழைப்பு.interactive (a)-வினைப்படும்.
inter alia (adv) - பிற செயல்களுக்கிடையில்.
interbreed (v)- கலப்பினமாக்கு.
intercalate (v) - இடையில் கல.
intercede (v) - பிரிந்து பேசு, இடைப்பட்டவராகச் செயற்படு. intercession (n).
intercept (n) - தடு,பிடி.interception (n) - தடுத்தல்.interceptor (n) - தடுப்பவர், தாக்குபவர்,தாக்கும் ஊர்தி.

313

intercourse

interchange (v) - பரிமாற்றம் செய், இடைமாற்றம் செய், மாறி மாறி அமையச் செய்.(n)- பரிமாற்றம், இடைமாற்றம்,கூடல். interchangeable (a)-பரிமாற்றக்கூடிய. interchangeably (adv).
intercity (a)- நகரிடைஇயங்கும் (ஊர்தி)(n)-நகரிடை இயங்கும் ஊர்திப்பணி, இவ்வூர்தி.
intercollegiate (a) - கல்லூரிகளுக்கிடையே நடைபெறும். கல்லூரிகள் இடைப்போட்டி.
intercom (n) - இடைவழிச் செய்தித் தொடர்பு அமைப்பு, இடைத் தொடர்பு அமைப்பு.
intercommunicate (V) - இடை வழிச் (செய்தித் தொடர்பு) கொள். intercommunication (n) - இடைவழிச் செய்தித் தொடர்பு.
inter communion (n)- பரிமாற்ற உறவு.(திருச்சபை-கத்தோலிகர்).
interconnect (v) - ஒன்றுடன் மற்றொன்றை இணை,இடைவழிச் செய்தித் தொடர்புகொள். interconnected (a) - இடைவழித் தொடர்பு கொண்ட.interconnection (n) - இடைவழித் தொடர்பு.
intercontinental (a) - கண்டங்களிடையே.
Intercontinental Balistic Missile ICBM - கண்டத்திலிருந்து கண்டம் பாயும் எறிபடை.
intercourse (n) - கலவி,புணர்ச்சி, தொடர்பு.