பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

long-shoreman

359

lord


long-shoreman (n) - கப்பல் சரக்கை ஏற்றி இறக்குந் தொழிலாளி.
longways, wise (adv) - நீளவாட்டில்,
loo (n) - கழுவுமிடம்
loolah (n) - பீர்க்கம் பஞ்சுக் கூடு
look (V) - நோக்கு,பார்(n) - பார்வை,நோக்கு scientific outlook - அறிவியல் பார்வை, நோக்கு.look (interj) - பார். look - alike (n) - ஒத்த உருவமுள்ளவர்.
looker (n) - கவர்ச்சி நங்கை,
looker - on (n) - பார்வையாளர்.
look in (n) -பங்கு கொள்ளல்.
looking-glass - முகம் பார்க்கும் கண்ணாடி,
look-out (n) - உற்று நோக்குமிடம், கண்காணிக்கும் இடம், (பகைவர்)
look - through (n) - விரைந்து படித்தல்.
loom (n) - நெசவுத் தறி. handloom (n)- கைத்தறி, (v)- தெளிவில்லாமல் தோன்று, அச்சுறுத்தும் வகையில் தோன்று.
loony (n) - சோம்பேறி. loony -bin (n) - மனநோயாளி மனை.
loop (n)- வளையம், கொக்கி, கண்ணி, சுற்று, கட்டளை நிறைவேற்றல் (கணி), கருத் தடை வளையம், சுருள் (v) சுருளாக வளை, வளைத்துக் கட்டு.

loophole (n) - ஓட்டை,கோட்டைச் சுவர்த் துளை
loopline (n) - கிளைவழி,புறவழி.
loose (a)- தளர்ச்சியான, நன்கு அமையாத, தெளிவற்ற, கட்டுப்பாடில்லாத (x tight) loosely (adv). loose (V) - அவிழ்த்து விடு, சுடு, loose (n) - கட்டுப் பாடில்லா மகிழ்ச்சி, நுகர்வு. loose-box -தாராள இடம் (குதிரை இலாயம்). loose covers- கழற்றும் உறைகள் (நாற்காலி). loose leaf - அகற்றும் தாள்கள் உள்ள (சுவடி). loosen (v)- தளர்த்து, விடுவி.
loot(n)- கொள்ளைப் பொருள்(v) - கொள்ளையடி. ஒ pillage, plunder, looter (n) - சூறையாடுபவர்.
lop (V)-கழி, வெட்டு (கிளை).lop - eared (a) -தொங்கு செவி . lop-sided (a) - ஏற்றத் தாழ்வான.
lope (v)- பாய்ந்தோடு (புலி). (n) - பாய்ந்தோடல், விரைந்தோடல்.
loquacious (a) -வம்பளக்கும்,வெட்டிப் பேச்சு பேசும் loquaciously (adv).
loquat(n)- அழகுமரம் (சீனா).
lord (n) - ஆண்டை, அரசன், ஆள்பவர், நிலக்கிழார், பெரு மகன் (v). இறுமாந்து நட. lordly (a) - வீறார்ந்த. lordship (n) - பெருமகன், பெரு மகன் பட்டம், ஆட்சி, ஆணை உரிமை அதிகாரம்.