பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

marine

373

marketing


marine (a) - கடலுக்குரிய,கடல் துறை சார், கப்பல் பந்தய,கடற்படை சார். marine biology - கடல் உயிரியல். marine (n) - நிலப்படை, கடற் படை வீரர். Marines (n) - இவ்விரு 'வீரர்படை' mariner(n). மாலுமி,கடலோடி, கப்பலோட்டி.
marionette (n) - நூல் கயிற்றில் ஆடும் பொம்மை ஒ. puppet.
marital (a) - கணவன் மனைவி சார், திருமணம் சார். marital disagreement - வாழ்க்கை வேறுபாடு. marital disharmony - திருமண வாழ்க்கை இசைவின்மை. marital problem - திருமண வாழ்க்கை சிக்கல்கள். marital wows - திருமண வாழ்க்கை உறுதிமொழிகள். marital status - திருமண நிலை (மணமானவரா, ஆகாதவரா, விலக்கு பெற்றவரா).
maritime (a) - கடல்சார், கப்பல்சார்.maritime law - கடலகச் சட்டம்.maritime powers - கடலக வல்லரசுகள். கடலுக்கு அருகிலுள்ள.
marjoram (n) - சமையல் மணப் பூண்டுச் செடி.
mark (n) - கறை, குறி, மதிப்பெண் புள்ளி, முத்திரை, mark (v) - குறிகாட்டு, மதிப்பெண் அளி, கவனி, அருகில் இரு (ஆட்டம்).
mark (n) - மார்க்,ஜெர்மன் பண அலகு.
marked (a) - குறித்த,தெளிவான,சிறப்புக் குறிப்புள்ள.
markedly (adv) - குறிப்பிடத் தகுந்த,
marker (n) - குறிப்பவர், குறிப்பி, ஆடுகளப் பணியாளர்,தேர்வாளர், கொடி, கம்பம் (ஒன்றைக் குறிப்பது).
marking (n) - குறிகள்(நிறம்,தூவி). marking ink - குறியிடு மை.mark-down (n) - விலைக் குறைப்பு. mark-up (n)- மொத்த விலை விழுக் காடு, விலை உயர்வு.
market (n) - சந்தை,அங்காடி,வணிகக் களம், விற்பனைக் களம், வாங்குவோர். the market-வாங்குவோரும் விற்போரும் market (V) - விற்பனை செய், விளம்பர விற்பனை செய். marketable (a) - விற்பதற்கேற்ற,marketability (n) - விற்பனைத் திறன்.
marketeer (n) - ஆதாயம் நாடுபவர்.black marketeer (n) - கறுப்புச் சந்தை வணிகர்.
marketing (n) - விற்பனை,அங்காடியாக்கம். marketing mix(n)- விற்பனையில் பல உத் திகளையும் கையாளுதல். marketing plan (n) - விற்பனைத் திட்டம்.