பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rebel

524

recherche


rebel (v) - கிளர்ச்சி செய், கலகம் செய் (n) - கலகக்காரர், கிளர்ச்சி செய்பவர்.rebellion (n) - கிளர்ச்சி. rebellious (a) - கிளர்ச்சி செய்யும் (கூட்டம்).
rebirth (n) - மறுபிறவி.
reborn (a)- மீண்டும் பிறந்துள்ள, புதுத் தோற்றமுள்ள.
rebound (v) - எதிர்த்தடி, எதிர்த் தள்ளு (n) - எதிர்தடித்தல், எதிர்த்துள்ளல்.
rebuff (n) - சட்டெனத் தடுத்தல்,மறுதலிப்பு (v)- மறுதலி.
rebuild (V) - மீண்டுங்கட்டு.
rebuke (v) - திட்டு,கண்டி (n) -திட்டு, கண்டிப்பு.
rebut (n) - பின்னுக்குத் தள்,எதிர்த்துத் தாக்கு.
rebutment (n) - பின் தள்ளல்,எதிர்த்துத் தாக்கல்.
recalcitrate (v) - கட்டுப்பாடு மீறு. recalcitrant (a) - கட்டுப்பாடு மீறும். recalcitrance (n) - கட்டுப்பாடு மீறல்.
recall (V) - திரும்ப அழை, நினைவூட்டு.
right to recall - திரும்ப அழைக்கும் உரிமை (n) - திரும்ப அழைத்தல்.
recant (v) - பின் வாங்கு, மாறு, பின்னடை, பணி அமர்வு நீக்கு. recantation (n).
recapitulate (v) - தொகுத்துக் கூறு.
recapitulation (n) - தொகுத்துக் கூறல்.


recapture (v) - திரும்பக் கைப் பற்று (n) - திரும்பக் கைப் பற்றல்.
recast (v) - திருத்தியமை, திரும்பக் கணக்கிடு.
recede (v) - பின்வாங்கு recession (n)- பின்னடைவு. recessive (a)- ஒடுங்கும் (பண்பு)(x dominant).
receipt (n) - வரவுச் சீட்டு, வரவினம் (x expenditure) (v) - வரவுச் சீட்டுக் கொடு. Sundry receipts (n) - சில்லறை வரவுகள்.
receive (v)- பெற்றுக் கொள், உள்ளத்தில் ஏற்றுக் கொள், வரவேற்பளி. receiver (n) - பெறுங்கருவி (வானொலி, செவிக்குழல், தொலைபேசி) சொத்துப் பேணுநர் (வழக்கு)
receivership (n) - சொத்துப் பேணுகை.
recension (n) - திருத்தியப் பதிப்பு
recent (a) - அண்மைக்கால ( x ancient)பா. modern.
receptacle (n) - கொள்கலம்,கொள்ளகம். reception (n) - வரவேற்பு (விழா). reception committee (n) - வரவேற்புக் குழு.
receptive (a) - எளிதில் புரிந்து கொள்ளும், ஏற்கும்.
recharge (V) - திரும்பத் தாக்கு,மீண்டும் மின்னேற்றஞ் செய், மீண்டும் வெடிமருந்து திணி, மீண்டும் காவலில் வை.
recherche (n) - மிகச் சிறந்தது.