உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புத்தர் அவதாரம் பட்டமரங்கள் தளிர்த்தனவே-எங்கும் பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே; திட்டுத் திடர்மணற் காடும்-சுடுகாடும் சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே. சீரிய ஓடை குளங்களிலே - நல்ல செந்தா மரைகள் மலர்ந்தனவே; பாரிலே அவ்விராக் கண்ட-புதுமையைப் பாடிட வல்லவர் யாரேயம்மா! வேறு 11 11 12 -ஒண்சுடர் உலகில் உதித்தெழு காலை மன்னிருட் சோலையோர் பொன்னிறம் பொலிய, நிரந்தொனி பரந்து நிறைவது போல, மாயையின் மனத்தெழு மகிழ்ச்சியும் பொங்கி இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும் (3) பாதல மீறப் படர்ந்து சென்றது; "பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்! எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்! புத்த பெருமான் புவியில் உதித்தனன்; அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்; (10) அவனுரை சேண்மின்: அழிமனம் ஒழிமின்: நலமுறு மெனவே நம்பி நாடுமின்; உள்ளத் தெளிமின்; உறுதி கொண்மின்; உய்யும் வழிஈது? உண்மையும் ஈதாம்; என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும் (15) -மந்திர மொழிகளாய் வத்தெழக் கேட்டனர். அதனால், அமைதி நிலவி, அன்பு தழைத்துக் குவலய முழுதும் குதூகல முற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/12&oldid=1501110" இலிருந்து மீள்விக்கப்பட்டது