பக்கம்:ஆசிய ஜோதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 ஆசிய ஜோதி கடலும் மலையும், காடும் மேடும். பூவுல கறியாப் புதுமணம் கமழ இனிய தென்றல் எழுந்து வீசியது. பெரியோர் கனவின் பலனைக் கூறுதல் மறுநாட் காலை மகிழ்ச்சி மிகவே கற்ற பெரியோர் கனவின் பயனைக் கொற்றவன் அறியக் கூறியது இதுவாம்; வேறு பாரரசி கண்டகளுா நற்கனாவாம்; பாணுவுமே கற்கடக மனைவில் நின்றான்; சீரமையும் ஆண்மகனைப் பெறுவான்; அந்தச் செல்வமகன் தெய்விக மகனே யாவான் ஒருமுயர் ஞானகுரு வாகி எங்கும் உண்மையுப தேசங்கள் செய்வான்; வேண்டின் வாரிதிருழ் புவிமுழுதும் ஆள்வான்; அன்னோன் 13. மகிமையெலாம் எடுத்துரைப்பது எனிதோ? ஐவா[ 14. புத்தர் அவதாரம் வேறு ஒருநாள் பகலில் உச்சியம் பொழுதில் அரண்மனை யருகில் அணிமலர் மலர்ந்து நறுமணம் வீசுவோர் நந்த வனத்தில் தழையும் பூவும் தனயில் தாங்கிக் கோயிலில் நட்டஓர் கொடிமரம் போவ வளருமோர் அசோக மரத்தின் நிழலில் மாயா தேவி வந்து நின்றனள். (8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/13&oldid=1501112" இலிருந்து மீள்விக்கப்பட்டது