பக்கம்:ஆசிய ஜோதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிற்கவே, புத்தர் அவதாரம் உரிய காலம் உறுவதை உணர்மரம், உணராப் பொருளெதும் உலகினில் இல்லை: 13 (10) மலர்முடி வணங்கி வளைந்து கவிந்தொரு தழைவீ டாகச் சமைத்து நின்றது. பாரிடம், பன் மலர் மலர்ந்தொரு பஞ்சனை யாயது; பக்கத் தெழுமொரு பாறையும் பிளந்து, (15) மதலையை ஆட்ட மஞ்சன நீரை ஓடும் அருவியாய் ஒழுக விட்டது. தேவி, தோவு நொம்பலம் நோக்கா டின்றியோர் மாவினைப் பெற்று மகிழ்ச்சி யுற்றனள், (20) மகவின் அழகிய வடிவினில் அமைந்த எண்ணான் கரிய இலக்கணம் கண்டு, இது தெய்விக மகவெனச் செப்பினர் தெரிந்தோர். சோபன மறிந்து சுத்தோ தனனும் தாயை மகவொடு தண்டிகை ஏற்றி (25) அரண்மனை உய்த்திட ஆணை யிட்டனன். நாற்றிசைக் காவலர் உருமாறி வருதல் தணடிகை அந்நாள் தாங்கிட வந்தவர், மாநில மீது மனிதர் அனுதினம் செய்யும் வினைகளைச் செப்பேடுகளில் தீட்டி நான்கு திசைகளும் நின்று (30) காக்கும் காவலர் கனக மால்வரை வாழிடம் விட்டு வந்த தேவரென்று உண்மை யுணர்ந்தோர் உரைக்கின் றனரே. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/14&oldid=1501114" இலிருந்து மீள்விக்கப்பட்டது