இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம்
(ஒரு நாள் சித்தார்த்தன் யசோதரையின் அந்தப்புரத்தில் அமர்ந்திருக்கிறான். அழகிய வீணை யொன்று ஒருபுறத்தில் இருக்கிறது. காற்று வீசும் பொழுது அந்த வீணையிலிருந்து ஒலி உண்டா கிறது. அந்த ஒலியில் கவந்திருக்கும் தேவகீதம் சித்தார்த்தனுடைய செவிக்கு மட்டும் கேட்கிறது. தேவகீதத்தில் பொதிந்துள்ள விஷயத்தைப் பின் வரும் பாடலில் காணலாம்.]
தேடும் இடங்களெல்லாம்-ஓய்வு
தேடியும் காணாமல்
ஓடி ஓடி அலையும் - காற்றின்
ஒலியே நாங்கள், ஐயா!
ஆன்ற புவிவாழ்வும் - எண்ணில்
அற்ப வாழ்வேயாம்;
தோன்றும் ஒருமுச்சாம்-புயலாம்
சூறா வளியேயாம்.
இந்த உயிர்களெல்லாம்-பிறக்கும்
இடமும் எவ்விடமோ?
இந்த உயிர்களெல்லாம்-மீ
ஏகும் இடம் எதுவோ?
எங்கிருந்து வந்தோம்?-நாங்கள்
எதனுக் காகவந்தோம்?
இங்கிவ் உண்மையெலாம்-அறிவார்
எவரு மேயுண்டோ?
3