இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தார்த்தன் கேட்ட தேவகீதம் வாழ்வு மாயமெனும்-உண்மை மனத்திற் கொள்ளாமல், நாளும் நைந்திடுதல் -எமக்கு நகைப்பே தருகுதய்யா! நீல மேகந்தான்-ஆணையால் நிலையில் நின்றிடுமோ? காலத் தோடும்நதி- கையால் தடுக்க மாறிடுமோ? துன்பச் சுழியிலே-விழுத்து சுழலும் உலகத்தை இன்பக் கரையேற்ற நீயும் இரங்கிட வேண்டும். --வையம் முழுவதையும்-காக்க வந்திங் கவதரித்த ஐயனே! ஆளுதற்குக்-காலம் அணுகி வருகுதைய்யா! ‘என்று வத்திடுவான்-ரக்ஷகன் எவ்விடம் தோன்றிடுவான்' என்றுஇப் புவியெலாம் - நோக்கி எதிரே நிற்குதைய்யா! அண்ணிலா உலகம்-இடறிக் கவிழ்ந்து வீழாமல், அண்ண லேஎழுந்து-விரைவில் அருள வேண்டுகின்றோம். 35 11 13 18 14 13 16