இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புத்தரும் ஏழைச் சிறுவனும் அவன் செயல் வையகம் வாழ்ந்திடவே-பிறந்த மாதவச் செல்வன்முகம் வெய்யிலில் வெந்திடாமல்- தழைகள் வெட்டி அருகில் நட்டான். தெய்வ குலத்தியண்- எளியேன் தீண்டலும் ஆகாதினிச் செய்வதும் யாதெனவே-சிறிது சிந்தை தயங்கி நின்றான். உள்ளத் தெளிந்துடனே-வெள்ளாடு ஒன்றை அழைத்துவந்து, வள்ளல் மயக்கொழிய-மடுவை வாயில் சுறந்துவிட்டான். நட்ட தழைகளெáலாம் வளர்ந்து நாற்புற மும்கவித்து, கட்டிய மாளிகைபோல்- வனத்தில் காட்சி யளித்தஅம்மா/ பூவொடு காய்கனியும்- தளிரும் பொலிந்து நிரம்பியங்கே மேவு பலமணிகள்--- இழைத்த விதானமும் ஆனஅம்மா! ஐயனை இவ்வுலகம்- காணுதற்கு அரியவோர் தெய்வமெனக் கைகள் தொழுதுநின்றான்.-சிறுவன் களங்கமிலா வுளத்தான் 47 3 S 6 7 8