பக்கம்:ஆசிய ஜோதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரும் ஏழைச் சிறுவனும் எவர் உடம்பினிலும்-சிவப்பே இரத்த நிறமப்பா/ எவர்விழி நீர்க்கும் - உவர்ப்பே இயற்கைக் குணமப்பா! நெற்றியில் நீறும்- மார்பில் நீண்ட பூணூலும் பெற்றுஇவ் உலகுதனில்--எவரும் பிறந்த துண்டோ அப்பா! பிறப்பினால் எவர்க்கும்-உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டுமெனில்- நல்ல செய்கை வேண்டும், அப்பா! நன்மை செய்பவரே-உலகம் நாடும் மேற்குலத்தார்; தின்மை செய்பவரே-அண்டித் தீண்ட ஒண்ணாதார்." சிறுவன் பால் தருதல் நிலத்துயர் ஞானி-இவை நிகழ்த்தி, "என்தம்பீ கலத்தினிலே கொஞ்சம்--பாலைக் கறந்து தா" என்றாள். ஆயர் சிறுவனும்-கலத்தில் அளிக்க வாங்கியுண்டு, தாயினும் இனியன்- கொண்ட தளர்ச்சி நீங்கினனே. ஆ.-4 49 14 13 16 17 18 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/50&oldid=1503707" இலிருந்து மீள்விக்கப்பட்டது