உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

characteristic பண்புக் கூறு, சிறப்பியல்பு
charities அற நிலையங்கள்
chart கருத்துப் படம்
chasing விரட்டல்
check சரி பார்த்தல், குறித்தல், தடை
check-list குறிப்பிடு பட்டியல்
chest-pass நெஞ்சுக் கடத்துகை
child பாலன்,பிள்ளை
child-centred பிள்ளை மைய, குழந்தை மைய
childhood பாலப் பருவம், பிள்ளைப் பருவம்
chivalry நல் வீரர் பண்பு
choice தேர்தல் (G), கொள்ளல் (S)
choleric சுடு மூஞ்சி
chorographical map மீச்சிறு அளவுப் படம்
choroid விழி நடுப் படலம்
chorus கூட்டிசை, கோஃச்ட்டி கானம்
Christian கிறித்துவ
chromatic நிற, வண்ண
chromosome உயிரணுக் கோல்
chronicle கால வரன் முறை, நாளாகமம்
chronic நாட்பட்ட
chronology காலவியல்
church (கிறித்தவக்) கோவில், திருச் சபை, சமய அமைப்பு
ciliary muscles சிலியாத் தசை
cinema சினிமா, படக் காட்சி
cipher சுழி, சைஃவர்
circle வட்டம்
circle stride ball வட்டமடி பந்து
circular வட்டமான, சுற்றிக்கை
circulation சுற்றோட்டம்
citizen குடிமகன், குடியுரிமையாளன்
citizenship குடிமை
civics ஆட்சி நூல்
civil government உள்நாட்டு அரசாங்கம்
civilization நாகரிகம்
clarity தெளிவு, விளங்க வைத்தல்
clash மோதல்
class வகுப்பு
-boundary வகுப்பு எல்லை
-frequency வகுப்பு அலைவெண்
-interval வகுப்பு இடைவெளி
-limits வகுப்பு வரம்புகள்
-marks வகுப்பு மதிப்பெண்கள்
-routine வகுப்பு நடைநெறி
-teaching வகுப்புப் போதனை
classification தரம் வகுத்தல், வகைப்படுத்தல் (சோதனை)
classify தரம் வகு; வகைப்படுத்து
clause உறுப்பு வாசகம்
claustrophobia அடைப்புக் கிலி
cleanliness துப்புரவு
cleft palate பிளவண்ணம்
clerical aptitude test எழுத்தர் நாட்டச் சோதனை
clerk எழுத்தர், குமஃச்தா
climate தட்ப வெப்ப நிலை
climax உச்ச நிலை
climbing a rope கயிறேறல்
clinic மருத்துவ விடுதி
clipped endings கடையெழுத்து விழுங்கல்
closed mind மூடிய மனது
closure மூட்டம் (p)
clot உறைவு
clothing உடை
clove hitch கிராம்பு முடிச்சு
club சங்கம்
club foot கோணல் பாதம்
clue உளவு
clumsy இசைவற்ற; இயக்கக் குறையுடைய
cluster கொத்து
coagulation உறைதல்
cochlea (காது) நத்தை எலும்பு
code குறியீடு; (அறி) நெறித் தொகுதி
codification தொகுத்தல்; குறியீட்டாக்கம்
co-education கூட்டுக் கல்வி
co-efficient குணகம், கெழு
of correlation இணைப்புக் கெழு
of dispersion சிதறு கெழு
of skewness சாய்வு கெழு
of variation மாறுதல் கெழு