பக்கம்:ஆடரங்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இரண்டு தோழர்கள்

து வெறும் கதை என்றுதான் பலருக்கும் தோன்றும்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் கண்முன்னாலேயே நடந்தது. முழுவதும் உண்மை என்கிற உத்தரவாதத்துடன்தான் நான் கதையைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்களில் நானும் சில வாரங்களுக்கு முந்தி வரையில், நம்பிக்கையற்றவன்தான்! ஆனால் இப்போது நம்பத்தான் வேண்டியதாக இருக்கிறது—என்ன செய்வது?

நாலைந்து வருஷங்களாக என் வீட்டிலே இருந்துகொண்டு ஒரு பையன் படித்துக்கொண் டிருக்கிறான். அவன் பெயர் ராமு. இப்போது அவனுக்கு வயசு பதினாறாகிவிட்டது. எஸ். எஸ். எல். சி. பரீட்சையில் இவ்வருஷம் நல்ல மார்க்குகளுடன் தேறிவிட்டான். அவனுக்குப் பரீட்சை தேறிய கதைதான் இது. ஆனால் கதை என்றால் கதை அல்ல; உண்மை.

****

ராமு எனக்குத் தூர பந்து. அவன் பெற்றோர் மிகவும் ஏழைகள். பையன் எஸ். எஸ். எல். சி. என்கிற சொர்க்க வாசல் தாண்டி, குமாஸ்தா லோகம் என்கிற சொர்க்கத்தை-லட்சிய பூமியை அடைந்துவிட வேண்டுமென்பது அவனுடைய பெற்றோரின் விருப்பம். அவனுடைய படிப்பையும் நடத்தையையும் அவர்களுக்குத் திருப்திகரமாகக் கவனித்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் அவனை என்னிடம் விட்டு வைத்திருந்தார்கள்.

நடத்தையைப் பற்றிய வரையில் அவனிடம் பிசகு சொல்லவே முடியாது. வெகு நல்ல பையன்; பரம சாது. எதிர்த்து வாயாடுவது என்றால் என்ன என்றே அவனுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/108&oldid=1523734" இலிருந்து மீள்விக்கப்பட்டது