பக்கம்:ஆடரங்கு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு தோழர்கள்

105

கொண்டிருந்தான். சமயம் நேருகிற போதெல்லாம் இரண்டு ராமுகளும் சேர்ந்துதான் இருப்பார்கள்.

குண விசேஷங்கள், உருவம், தோற்றம், நடை உடை பாவனை, வயசு, எல்லாவற்றிலுமே இரண்டு பேரும் ஒன்றுதான். ஆனால் இருவருக்கும் ஒரு விஷயத்தில் மட்டும் பெரிய வித்தியாசம் இருந்தது. எங்கள் வீட்டு ராமு படிப்பில் அந்த வகுப்பில் கடைசி என்று சொல்ல முடியாது - தேறக் கூடியவர்களில் கடைசி என்று சொல்லலாம். ஆனால் அந்த ராமு தான் வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதல். இத்தனைக்கும் அவன் மாமா வாசிப்பதற்குப் பாடபுஸ்தகங்கள் கூட வாங்கித் தரமாட்டார்.

இப்படி இரண்டாவது பாரத்திலிருந்து ஐந்தாவது பாரம் வரையில் இரண்டு ராமுகளும் நெருங்கிய தோழர்களாகப் படித்து வந்தார்கள். ஐந்தாவது பாரத்திலும் தேறி, ஆறாவது பாரத்திற்கும் இருவரும் வந்துவிட்டார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பல்லவா? இருவருமே பொறுப்புடன் படித்து வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படிப்பு, அந்த ராமுவின் விஷயத்தில் பலன் அளிக்கும்போல் இருந்தது. எங்கள் வீட்டு ராமுவின் விஷயத்தில் பலன் தராதுபோல் இருந்தது. அவ்வளவுதான். இருவரும் சில சமயம் சேர்ந்தும் படிப்பார்கள்.

2

கிறிஸ்துமஸ் லீவுக்குப் பிறகு அந்த ராமு ஏனோ தெரிய வில்லை - பள்ளிக்கூடத்துக்குத் திரும்பவில்லை. 'நாளை வருவான், நாளை வருவான்' என்று எங்கள் ராமு காத்திருந்தான். வரவில்லை. ஒரு வாரம் கழித்து ராமுவின் மாமா வீட்டிற்குப் போய் விசாரித்ததில்தான் விஷயம் தெரியவந்தது. லீவில் போன ராமு, எங்கேயோ காவேரியில் நீந்தப் போய் ஆற்றில் இறந்துவிட்டானாம்!

கை இழந்தவன்போல் ஆகி விட்டான் எங்கள் ராமு. படித்தாலும் புரிந்துகொள்ளாதவன்; இப்போது படிப்பதே அரிதாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/110&oldid=1523740" இலிருந்து மீள்விக்கப்பட்டது