பக்கம்:ஆடரங்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஆடரங்கு


“உனக்குப்‌ பைத்‌தியந்தான்‌ பீடித்துவிட்டது!” என்‌றேன்‌ நான்‌. பின்னால்‌ நடந்ததை எல்லாம்‌ கவனித்துச்‌ சேர்த்‌துப்‌ பார்க்கும்போதுதான்‌ அவள்‌ சொன்னதில்‌ ஏதோ விஷயம்‌ இருக்க வேண்டும்‌ என்று எனக்குத்‌ தோன்றியது.

பரீட்சைக்கு முதல்‌ நாளும்‌ இப்படித்தான்‌. “என்னடா படித்தாய்‌, ராமு?” என்று நான்‌ கேட்டபோது; “ஒன்றுமே படிக்கவில்லையே?” என்று அந்த நிமிஷம்‌ வரை புஸ்தகத்தின்‌ முன்‌ உட்கார்ந்திருந்த ராமு பதில்‌ அளித்தான்‌. எனக்கு ஆச்‌சரியமாகத்தான்‌ இருந்தது. படிக்காமல்‌ புஸ்தகத்தைப்‌ பிரித்து வைத்துக்கொண்டு என்னதான்‌ செய்துகொண்‌டிருந்தானோ?

ராமுவாகவே சொன்னான்‌. “ராமு மட்டும்‌ இருந்தானானால்‌--எப்படிப்‌ படிப்பான்‌! எனக்கும்‌ சொல்லித்‌ தருவானே!” என்றான்‌.

“அவனை நினைத்துக்கொண்டாவது நீ நன்றாகப்‌ படித்துப்‌ பாஸ்‌ பண்ண வேண்டாமா? படித்திருக்கிறாயா? பாஸ்‌ பண்ணிவிடுவாயா?” என்று கேட்டேன்‌.

“என்னவோ?” என்றான்‌ ராமு.

3

ஸ். எஸ்‌. எல்‌. சி. பரீட்சைகள்‌ முடிந்துவிட்டன. அன்‌றன்று கேள்வித்தாளை ராமுவிடமிருந்து கையில்‌ வாங்‌கி அவனைப்‌ பரீட்சித்துப்‌ பார்த்தேன்‌. கேள்வித்‌ தாள்களில்‌ இருந்த ஒரு கேள்விக்காவது அவனால்‌ பதில்‌ சொல்ல இயலவில்லை. "என்னடா எழுதியிருக்கறாய்‌?" என்று கேட்டால்‌, “என்ன எழுதினேனோ, தெரியவில்லை!” என்றான்‌.

எனக்குப்‌ புரியவில்லை. 'எப்படியாவது நடக்கட்டும்‌; யார்த்துக்கொள்ளலாம்‌' என்று விட்டுவிட்டேன்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/113&oldid=1523745" இலிருந்து மீள்விக்கப்பட்டது