பக்கம்:ஆடரங்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு தோழர்கள்

109


பரீட்சைகள்‌ முடிந்து ராமு தன்‌ ஊருக்குப்‌ போன பிறகு ராமுவின்‌ உபாத்‌தியாயர்‌ கோபாலையரைத்‌ தற்செயலாகச்‌ சந்தித்தேன்‌. அவர்‌ ராமுவை விசாரித்தார்‌. “ஊருக்குப்‌ போய்விட்டானா? சரிதான்‌ ; பரிட்சையில்‌ குனிந்த தலை நிமிராமல்‌ ரொம்பவும்‌ நன்றாக எல்லாக்‌ கேள்விகளுக்கும்‌ பதில்‌ எழுதியிருக்கறான்‌ என்று ஹாஸ்டல்‌ சூபரிண்டாக இருந்த ராமசாமி. நாயுடு சொன்னார்‌” என்றார்‌.

“அப்படியா!” என்றேன்‌ நான்‌.

பரீட்சை முடிவுகள்‌ வந்தவுடன்‌ ராமு தேறிவிட்டான்‌ என்று தெரிந்தது. எஸ்‌. எஸ்‌. எல்‌. சி. புஸ்தகங்கள்‌ பள்ளிக்‌ கூடத்திற்கு வந்த பிறகுதான்‌ தெரிந்தது—எங்கள்‌ ராமு நானூற்‌றைம்பது மார்க்குகளுக்கு மேல்‌ வாங்க, அவன்‌ பள்ளிக்கூடத்‌திலே முதல்வனாக, ராஜதானியிலே முதல்‌ நூறு பேர்வழிகளுக்‌குள்‌ இருந்தான்‌.

ராமு வந்திருந்தான்‌. பரீட்சை முடிவுகளைப்‌ பார்த்து அவனே ஆச்சரியத்தில்‌ மூழ்கயிருந்தான்‌.

ராஜி சொன்னாள்‌: “பரிட்சை தேறி இத்தளை மார்க்குகள்‌ வாங்க யிருப்பது நம்ப ராமு இல்லை!” என்றாள்‌.

“பின்‌ யாராம்‌?” என்று கேட்டேன்‌ நான்‌.

“அவன்‌ தோழன்‌ ராமுதான்‌! படித்தது, பரீட்சை எழுத யது, மார்க்‌ வாங்கியது எல்லாம்‌ அந்த ராமுதான்‌. இந்த ராமு சாப்பாட்டைத்‌ தவிர மற்றதிலெல்லாம்‌ எவ்வளவு சோப்பளாங்‌கின்னு நமக்குத்‌ தெரியாதா?” என்றாள்‌ ராஜி.

“அந்த ராமு இருந்தால்‌ இந்த மார்க்கும்‌ வாங்கியிருப்‌பான்‌, இன்னும்‌ அதிக மார்க்கும்‌ வாங்கியிருப்பான்‌!" என்‌றேன்‌ நான்‌.

எங்கள்‌ ராமுவின்‌ கண்களில்‌ ஜலம்‌ துளித்‌திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/114&oldid=1523746" இலிருந்து மீள்விக்கப்பட்டது