பக்கம்:ஆடரங்கு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சோதனை

னிதனை அவனுடைய சக்தியை மீறிக் கடவுள் சோதிப்பதே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு மனிதன் இவ்வளவுதான் தாங்குவான் என்பது கடவுளுக்குத் தெரிகிறது. ஆனால் மனிதனே மனிதனைச் சோதிக்கத் தொடங்கும்போது...

"அணுக்குண்டும் ஹைட்ரஜன் குண்டும் தோன்றிவிடுகின்றன" என்றார் நண்பர்.

"உண்மைதான். ஆனால் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு விவகாரங்களெல்லாம் ரொம்ப ரொம்பப் பெரியவர்கள், பிரதம மந்திரிகள், தேசத் தலைவர்கள் கூடித் தீர்க்கவேண்டிய இன்றைச் சில்லறை விஷயங்கள். நாம் எதற்காக அதில் ஈடுபட்டு மனசைக் கலக்கிக்கொள்ள வேண்டும்?" என்றேன்.

நண்பர் சொன்னார்: "நாம் மனசைக் கலக்கிக்கொள்ள மறுத்தாலுங்கூட அவை எல்லாம் காலைத் தினசரித் தாளில் தொடங்கி இரவு முதல் ஜாம சொப்பனாவஸ்தை வரையில் நம்மை விடாமல் துரத்துகின்றனவே, என்ன செய்வது? தப்பி எங்கே ஓடி ஒளிவது?"

இதற்கு நேரடியாக நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சோதனை என்று நான் சொன்னபோது 1942, 1943-இல் என் வீட்டில் நடந்த ஒரு போலீஸ் சோதனையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் சொன்னேன். அதைப்பற்றி அந்த நண்பருக்குத் தெரியாது.

"1942, 1943-இலா? நீங்கள் எப்போதுமே அரசியலில் ஈடுபடாதவராயிற்றே?" என்று கேட்டார் நண்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/116&oldid=1523747" இலிருந்து மீள்விக்கப்பட்டது