பக்கம்:ஆடரங்கு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஆடரங்கு


"பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதிகளான இந்தியப் போலீஸ் இலாகா அதற்காக என்னை விட்டுவிடுவார்களா?" என்றேன்.

"நீங்கள் போலீஸ் சோதனை என்ற பிறகு எனக்குக்கூட ஒரு போலீஸ் சோதனைக் கதை ஞாபகம் வருகிறது. முதலில் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள், பிறகு நானும் ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார்.

"நான் சொல்ல வந்தது கதை அல்ல; ஒரு சின்ன அநுபவம்."

"உம்......"

"சர்வதேசக் கதை மலர்கள் என்று நான் ஒரு வரிசை மொழிபெயர்ப்புக் கதைகள் வெளியிட்டிருக்கிறேன்."

"ஆமாம், நானும் பார்த்திருக்கிறேன்" என்றார் நண்பர்.

"அவற்றின் அட்டையில் காதற்கதை. இத்தாலி -காளி - ஜெர்மனி என்று கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தது."

"ஆமாம். எனக்கும் ஞாபகம் இருக்கிறது" என்றார் நண்பர்.

"1942 கடைசியில் ஒரு நண்பரின் உதவியால் நான் சர்க்காரின் கவனத்துக்கு இலக்கானேன். அச் சமயம் ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, வாடகை கொடுக்காத ஒரு 'வாடகை பஸ்'ஸில் ஒரு போலீஸ் கோஷ்டி என் வீட்டை அவசரச் சோதனை போட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே கவிழ்த்துவிடுவதற்கான மூலாதாரமான ஒரு திட்டம், ஒரு ஆயுதம், ஒரு... என்னவென்று சொல்வது...ஏதாவது என் வீட்டில் நானும் அறியாமலே வந்து புகுந்துகொண் டிருக்குமோ என்று எனக்கே அந்தப் போலீஸ் படையைப் பார்த்ததும் சந்தேகமாகப் போய்விட்டது. எனக்குத் தூக்கக் கலக்கம். வீட்டிலும் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நல்ல வேளையாகப் போலீஸ்காரர்கள் கையில் வேறு எதுவும் அகப்படவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/117&oldid=1523748" இலிருந்து மீள்விக்கப்பட்டது