பக்கம்:ஆடரங்கு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனை

115


இப்படி ஒரு நாள் இரவு; அன்று வியாழக்கிழமை என்று ஞாபகம். அன்று வழக்கத்தை விடச் சற்று அதிக நேரமாகி விட்டது என்றும் ஞாபகம். சுமார் பதினொரு மணி யிருக்கலாம். ஆற்றுப் பாலம் தாண்டி இறக்கத்தில் இறங்குகிறபோது இடது கைப் பக்கம் இருந்த திடலில் இரண்டு காஸ் லைட்டுகள் தெரிந்தன. பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்களின் உருவங்களும் தெரிந்தன.

ரோடு ஓரத்தில் இரண்டொருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் திடலுக்குள் போய்விடாதபடி அங்கே ஒரு போலீஸ்காரன் காவல் நின்றான். 1942-ல் என்று சொன்னேன். இல்லையா? போலீஸ்காரனைப் பேச வைப்பது, அதுவும் என்னையும், என் நண்பர்களையும் போலக் கதர் அணிந்தவர்கள் பேசவைப்பது சிரமமாக இருந்தது.

ரோடு ஓரத்திலிருந்த மற்றவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. 'என்னவோ தேடுகிறார்கள்!' என்றான் ஒருவன். ஜப்பான் குண்டு விழுந்தது!' என்றான் வேறு ஒருவன். "பாரசூட்டில் இறங்கினான் ஒருவன்; நான் சாயங்காலமே பார்த்தேன்' என்றான் ஒருவன். காபியையும் மறந்து விட்டு அது என்னவாயிருக்கலாம் என்று யோசித்தவர்களாக நாங்கள் நின்றோம்.

அறுபது எழுபதடிக் கப்பால் நடந்ததெல்லாம் காஸ்லைட் வெளிச்சத்தில் சற்றுத் தெளிவாகவே தெரிந்தது. பத்தடி, இருபதடி நடந்து போலீஸ் கோஷ்டியினர் காஸ்லைட்டுகளை இறக்கி வைக்கச் சொல்வார்கள். பிறகு மண்வெட்டி எடுத்து ஓரிடத்தில் வெட்டுவார்கள். அதிகமாக வெட்டவும் மாட்டார்கள். கூட இருந்த ஓர் உருவத்தை - அது ஒரு பெண் உருவம் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை, நாங்கள் நின்ற இடத்திலிருந்து - ஏதோ அதட்டலாகக் கேட்பார்கள். ஏதாவது ஒரு கடுமையான போலீஸ் குரல் அவ்வளவு தூரத்துக்கப்பால் எங்கள் காதிலும் விழும். பிறகு காஸ்லைட்டுகளைத் தூக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/120&oldid=1523752" இலிருந்து மீள்விக்கப்பட்டது