பக்கம்:ஆடரங்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனை

117


அவளைப் போலீஸ்காரர்கள் சொன்னதை இங்கே மனுஷாள் காதால் கேட்கும்படி மாற்றிச் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

திருட்டுக் கர்ப்பக் கதை என்று எண்ணினேன். 'போகலாம்' என்று நான் கிளம்புகிற சமயம் இன்னொரு போலீஸ்காரன் சொன்னான், "என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரியோடே சண்டை என்றால் அவள் குழந்தையைக் கழுத்தைத் திருகிப் புதைத்துவிடறதா? வெறுமனே கேட்டால் சொல்லமாட்டாய் நீ!”

பக்கத்து வீட்டுக்காரியின் குழந்தையைக் கொலை செய்து விட்டாளா?

அடாடா! அவளைப் பார்த்தால் அப்படி ஒன்றும் கொலைகாரி மாதிரி தெரியவில்லையே என்று நாங்கள் எண்ணினோம்.

ஆனால் போலீஸ்காரர்களுக்கு அவள்தான் கொலைகாரி என்று நிச்சயமாகத் தெரியும்போலும்! குழந்தையைக் கழுத்தைத் திருகி அங்கே அந்தத் திடலில் எங்கேயோதான் புதைத்துவிட்டாள் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரியும் போலும்! மறுபடியும் காஸ்லைட்டுகளைக் தூக்கச் சொன்னார்கள். அந்தப் பெண்ணை முன்னால் விட்டார்கள். "எங்கே போனாய்? எந்தப் பக்கம் திரும்பினாய்? எத்தனை அடி நடந்தாய்; காட்டு!" என்று அதட்டினார்கள்.

அந்தப் பெண் நாலடி நகர்ந்தாள், நின்றாள், மறுபடியும் போலீஸ் அதட்டலின் பேரில் இன்னும் நாலடி நகர்ந்தாள்.

அது பார்க்கச் சகிக்காத காட்சியாகப்பட்டது எனக்கு. 'வாங்களையா போகலாம்' என்றேன். நண்பர்களும் பதில் சொல்லாமல் கிளம்பினார்கள். வழக்கத்தை விட எங்களுக்கு அப்போது காபித் தாகம் அதிகரிப்பதுபோல் இருந்தது.

நாங்கள் தேடிப்போன ஹோட்டலின் முதலாளிக்கு ஊர் விவகாரங்கள் பூராவுமே தெரியும். நாங்கள் வரவேண்டும் என்று காத்திருந்தவர்போல ஆற்றுப் பாலத்து இறக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/122&oldid=1523754" இலிருந்து மீள்விக்கப்பட்டது