பக்கம்:ஆடரங்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சரோஜாவின் சவுரி

கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும்போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டியைத் தேடி நடந்தேன்.

முதலில் கண்ணில் பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த பெட்டியில் பார்த்தேன். ஸீட்டுக்கு ஐந்து பேர் உட்கார்த்திருந்தார்கள். வேறு துணையில்லாத பெண்களுடன் பிரயாணம் செய்ய என்னைப்போல் சங்கோஜப்பட்டவர்கள் தான் அன்று ரெயிலேறி இருந்தார்கள் போலும்!

ரெயில்வே கார்டை, "இது பெண்கள் வண்டியில்லையே!” என்று கேட்டுக்கொண்டு அந்தப் பெண்கள் இருவரும் மட்டும் தனித்திருந்த வண்டியில் ஏறிக்கொண்டேன். உடனேயே வண்டியும் கிளம்பிவிட்டது.

கும்பகோணம் ஸ்டேஷனைவிட்டு வண்டி நகர்ந்ததும், அந்தப் பெண்களைக் கவனித்தேன் நான். நான் அந்தப் பெட்டியில் பிரயாணம் செய்வதற்கு அவர்கள் ஆக்ஷேபிக்க வில்லை. இருவரும் படித்தவர்கள்; அல்லது படித்துக்கொண் டிருப்பவர்கள் என்று எனக்குத் தோன்றியது. படித்துக்கொண் டிருப்பவர்களாய் இராது என்று எண்ணினேன். ஏனென்றால் படித்துவிட்டு வாழ்க்கையில் புகுந்து விட்டவர்களிடம் மட்டுமே சாதாரணமாகக் காணப்படும் ஓர் அடக்கம் அவர்களிடம் காணப்பட்டது. ஆடை அலங்காரங்களும் சற்று எளியனவாகவே இருந்தன. அவர்கள் தங்களுக்குள் சற்று உரக்கவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/125&oldid=1523813" இலிருந்து மீள்விக்கப்பட்டது